புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

உயர் அடுக்கு விசேட படையான Elite special task force (STF) வீரர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு புதிதாக .

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐனாதிபதியின் பாதுகாப்பு பிரிவான பிஎஸ்டியின் மீது ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது அமைக்கப்பட்ட ஐனாதிபதி பாதுகாப்பு பிரிவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு இறந்துபோன தேசிய ரக்பீ வீரர் வாசிம் தஜூதின் மரணத்தில் மூன்று பிஎஸ்டி வீரர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரான ரஜிதா சேனாரத்தன கூறியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஆயுதத்துடன் வந்த முன்னாள் எம்பியான நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு வீரர் ஒருவரை அனுமதித்ததையடுத்து பாதுகாப்பு படையின் நம்பத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது
இதையடுத்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கலைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக உயர் அடுக்கு விசேட படையான Elite special task force (STF) வீரர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு முழுவதும் எஸ்டிஎம் அமைப்புக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் காலம் நெருங்கும் இவ்வேளையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளமையானது அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad