புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

5½ கோடி வாக்காளர்களை சந்திக்க ஜெயலலிதா புதிய அதிரடி திட்டம்



அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில்,  ’’எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழக மக்களின் நல்வாழ்வு ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

ஜனநாயக ஆட்சி முறையில் ஓர் அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் வாக்களிக்கும் மக்கள் ஒவ்வொரு வரும் முழுமையாகத் தெரிந்து கொள்வது அந்த அரசுக்கு உறுதியும், பெருமையும் சேர்க்கும் என்பது மிகையல்ல.

தமிழகத்தில் உள்ள 64,094 வாக்குச் சாவடிகளுக்கு உட்பட்ட ஏறத்தாழ 5,62,06,547 வாக்காளர்களையும் அ.தி.மு.க. சார்பில் நேரடியாக சந்திக்க, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு வாக்கு சேகரிப்பாளர் நியமிக்கப்பட்டு, கழக அரசு மக்கள் மேம்பாட்டிற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளையும், செய்து முடித்திருக்கும் சாதனைகளையும், அவற்றின் காரணமாக வரலாறு காணாத வளர்ச்சிப் பாதையில் தமிழகம் சென்று கொண்டிருப்பதையும், முன் எப்போதும் காணாத முன்னேற்றப் பாதையில் தமிழகம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதையும் எடுத்துக் கூறுவது இன்றியமையாதது என்று கருதுகிறேன்.

இந்த மகத்தான பணியினை எனது பெயரில் செயல்பட்டு வரும் பேரவை மேற்கொள்ளும்.

தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி வாரியாக எனது பெயரில் செயல்பட்டு வரும் பேரவையின் சார்பில் நியமிக்கப்படும் ஒவ்வொரு வாக்கு சேகரிப்பாளரும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுடன் சென்று அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வாக்காளர் களையும் எத்தனை முறை சந்திக்க இயலுமோ அத்தனை முறை சந்தித்து அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும்.

பேரவையின் சார்பில் மேற்கொள்ள இருக்கும் இந்த இன்றியமையாத பணிக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’என்று கூறப்பட்டுள்ளது.

ad

ad