புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

ரஜினி படத்திற்கு புதிய தலைப்பு - ‘ கபாலி ‘


ரஜினியின் அடுத்தப்படத்தை அட்டக்கத்தி பா ரஞ்சித் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பு தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இப்படத்திற்கு முதலில் ‘காளி’ என்ற தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளதாகவும், பின்பு, ‘கண்ணபிரான்’ என்ற தலைப்பை வைக்க பரிலீசனை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த செய்திகளை படக்குழுவினர் மறுத்தனர். 

தற்போது கடைசியாக இப்படத்திற்கு ‘கபாலி’ என்று தலைப்பு வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் கபாலீஸ்வரன் என்பதால், அப்பெயரை சுருக்கி ‘கபாலி’ என்று வைக்கலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதுமட்டுமில்லாமல், மயிலாப்பூரில் மிகப்பெரிய தாதாவாக வலம்வந்த கபாலியை மையப்படுத்தியே ரஜினியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற செப்டம்பர் 17-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

ad

ad