புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015


Tna Mediadivision என்பவர் Nantha Gar மற்றும் 19 பேர்ஆகியோருடன்
1 மணி · 
எம் மாவீரர்களையும் அவர்களுக்கு துணை நின்று இன்று தலைமறைவாகி வாழ்கின்றவர்களை நாம் மனதில் நிறுத்தி செயற்படவேண்டிய கட்டாயத்தில் தற்போதுன் உள்ளோம்.
35 வருடகால ஆயுத போராட்டம் அமைதி உற்ற நிலையில் அதற்காக நாம் குடுத்த விலை மதிப்பற்றது ஆயுத போராட்டம் அழிவுற காரணமாய் இருந்தது
நமக்குள் நாமே சண்டையிட்டு கொண்டது தான் என்பதை யாரும் மறுக்க இயலாது ஒரு தனிமனிதனின் தேவைக்காகவும் சுயநலத்துக் காகவும் ஒரு பெரும் வரலாறே மரணித்தது நாம் அறிந்த ஒன்றே
தற்பொழுது மீண்டுமொரு துரோகம் தலை தூக்கி உள்ளது
65 வருட கால அரசியல் வரலாற்றில் தமழர் கென இருந்த ஒரே ஒற்றுமை ஏகோபித்து தமிழர் பிரதிநிதி கட்சிக்கென வழங்கும் வாக்குகள் தான் தற்போது அதிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது பல கட்சிகளை கொண்டது தேசிய தலைவர் விரும்பிய நிறுவிய கட்சி அதில் பல கட்சி பிரதிநிதிகள் இருப்பதால் கொள்கை ரீதியில் சில குழப்பங்கள் இருப்பதில் வாய்ப்புண்டு. அதற்காக கட்சியை விட்டு விலத்தி தமிழ்தேசிய கூட்டமைபையே விமர்சித்து தமிழருக்குள் பிளவு படுத்துவது எந்த விதத்தில் நியாயம். நமக்குள் பல இனக் கட்சிகள் ஊடுருவி உள்ள நிலையிலும் நாம் நமது பலத்தையும் மானத்தையும் ஒரே கட்சிக்கு வழங்கி நிரூபித்துள்ளோம் அனால் தற்போது புலத்தின் சில பணக் கூலிகளுடன் சேர்ந்து ஒரு ஆசனம் கூட கிடைக்குமா என்ற ஐயத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி பலரை விலைக்கு வாங்கி பேரம்பேசி வருகின்றது
காலகாலமாக அரசியலில் கைதேர்த்து போராட்டங்களில் பங்கு பற்றி அறிவு மேதைகளாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைபினரின் பெறுமதி தெரியாத சிலர் தென் இலங்கைக்கும் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு விலை போயுள்ளது கவலையளிகிறது
நமது தேசியத்தலைவர் இருந்திருந்தால் இவ்வாறான பிளவுபடுத்தலை ஆதரித்து இருப்பார ஒரு பெரும் வரலாறு கொண்ட தமிழர் பாரம்பரிய கட்சியை உடைக்க நினைத்திருப்பாரா? தலைவன் சேர்த்து வளர்த்த எம்மை மேல்மாகாண அரசியல் வாதிகள் மாற்ற பார்கிறார்கள் தமிழரின் இன மானம் புரியாதவர்கள் எம்மை கூறு போட நினைகிறார்கள்
மகிந்தவை வரவிதவர்களும் நாங்கள் தான் போகசெயதவர்களும் நாங்கள் தான் ஆட்சியே மற்றும் அளவுக்கு பலமாக இருந்த எமது ஒற்றுமை சிதறலாமா மாற்றம் வேண்டும் என்பது உண்மை அனால் அதற்கான நேரம் இது அல்ல சிறுபான்மையினருக்கு தேவை ஒற்றுமை அது தான் இபொழுது எமக்குள்ள ஒரே ஆயுதம் இறுதியாக ஒரு முறை வழங்கி தான் பார்ப்போமே சரிவராத பட்சத்தில் மாற்றலாம் காலகாலமாக எம்மோடு இணைந்து பயணிக்கும் தமிழ்தேசிய கூடமைபினரை நம்பலாம் புதிய அரசியல் வாதிகளை பின்னர் யோசிக்கலாம் அன்புக்கினிய மக்களே இந்த வாய்ப்பை இழந்து இன்னொரு துரோகத்திற்கு வழி சமைகாதீர்கள்
நன்றி :தமிழ் தேசியம்

ad

ad