புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

தலைமறைவான அனுர யாப்பா, சுசில் பிரேமஜயந்த! துரத்தும் நீதித்துறை


முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் இவர்கள் இருவரையும் முறையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் செயலாளர் பதவிகளிலிருந்து ஜனாதிபதி நீக்கியிருந்தார்.
இதனையடுத்து புதிதாக நியமிக்கப்பட்ட செயலாளர்கள் இருவரும் அனுர யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தங்கள் கடமைகளில் குறுக்கிடாமல் இருப்பதற்கான இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
எனினும் குறித்த நீதிமன்றத் தடை உத்தரவு இதுவரை அனுர யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரிடம் கையளிக்கப்படவில்லை. இருவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மறைவிடங்களில் தங்கியிருப்பதே அதற்கான காரணமாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் அனுர யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தங்கள் வாக்குகளை அளிக்கவென வாக்குச்சாவடிகளுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் நீதித்துறை அதிகாரிகள் அங்கு காத்திருக்கின்றனர்.
அத்துடன் முன்னாள் அமைச்சர்கள் இருவரின் வீடுகளின் முன்னாலும் நீதிமன்ற கட்டளையுடன் பொலிசார் தொடர்ந்தும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் வாக்களிக்காமல் இருக்கும் நோக்கில் சுசில் பிரேமஜயந்த தொடர்ந்தும் இரகசியமான முறையிலேயே நடமாடுகின்றார். அவரது தொலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
அனுர யாப்பா மாத்திரம் தான் வாக்களிக்க செல்லவுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவு கையளிக்கப்படும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ad

ad