புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

ஆயுள் கைதி தவமணி புதுச்சேரியில் கைது: திருச்சியில் ரகசிய இடத்தில் தீவிர விசாரணை



 கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் தவமணி(28). 2012ல் கடலூரில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2005 முதல் 2010 வரை குரூப் 2 தேர்வு வினாத்தாள் அவுட் ஆன வழக்கிலும் தொடர்புடையவர். புனேயில் கடந்த 2013ல் அனில் என்பவர் கொலை வழக்கிலும் தொடர்புள்ள இவரை, வழக்கு விசாரணைக்காக திருச்சி ஆயுதப்படை போலீசார் கடந்த ஆண்டு நவம்பா் 25ம் தேதி ரயிலில் புனே அழைத்து சென்று மீண்டும் திருச்சிக்கு அழைத்துச் வந்த போது 27ம் தேதி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அவரை அழைத்துச் சென்ற எஸ்.ஐ இளங்கோவன் உள்ளிட்ட 5 போலீசார் மற்றும் சிறை வார்டன்கள் இளங்கோவன், பாலகிருஷ்ணன், புண்ணியமூர்த்தி, போஸ் என மொத்தம் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த கே.கே.நகா் போலீசார் தப்பி ஓடிய தவமணியை தேடி வந்தனா். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனா். தப்பிய தவமணி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாடு தப்பி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனாலும் தொடா்ந்து தனிப்படை போலீசார் தவமணியின் சொந்த ஊா், சென்னை மற்றும் கடலோர பகுதிகளான கேரளா, புதுச்சேரி ஆகிய ஊா்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனா். 

இந்நிலையில் தவமணி புதுச்சேரி அருகே குடும்பத்துடன் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு நடத்திய தேடுதலில் தவமணியை நேற்று இரவு தனிப்படை போலீசார் பிடித்து கைது செய்தனா். பின்னா் அவரை திருச்சி அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

கடந்த 10 மாதமாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த தவமணியை போலீசார் கைது செய்திருப்பது சிறை காவலா் களுக்கும் மற்றும் அவருக்கு உதவி செய்த போலீசாருக்கும் கிலியை ஏற்படுத்தி உள்ளது. 

சிக்கியுள்ள தவமணியிடம் குரூப் 2 வினாத்தாள் வெளியிட்டதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்கப்பட்டது. ரூ.300 கோடி சம்பாதிக்கப்பட்டது உண்மையா, அப்படியானால் அந்த பணம் எங்குள்ளது, இதில் யார் யாருக்கு தொடா்பு உள்ளது, ரயிலில் தப்பிய போது யார், யார் உதவியது, புனேயில் உதவி செய்த ஐஏஎஸ் அதிகாரி யார் என்பது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனா். குரூப் 2 வினாத்தாள் வெளியிட்டதன் மூலம் ரூ.300 கோடி சம்பாதித்தது குறித்த தகவல் அறிந்து மிரட்டியதால் உடன் இருந்த புனே கூட்டாளி அனில் என்பவரை கொல்ல, தவமணி சிறையில் திட்டம் தீட்டினார். 

இதனால் சிறையில் இருந்த நண்பர்கள் கிள்ளிபிரகாஷ், மணிகண்டன், கருவாடு மாரியப்பன் ஆகியோரை சொந்த செலவில் ஜாமீனில் வெளியே போக தவமணி, மனைவி எழிலரசி மூலம் ஏற்பாடு செய்தார். அதன்பின் தவமணியின் காரில் கிள்ளிபிரகாஷ், மணிகண்டன், கருவாடு மாரியப்பன் மற்றும் குறிஞ்சிபாடியை ரவுடி நாகூர்மீரான் ஆகியோர் புனே சென்று அனிலை கொலை செய்தனர். 

பின்னர் காரில் வரும் போது, கார் பழுதானது. அந்த காரை அங்கேயே விட்டுவிட்டு அனைவரும் தமிழகம் வந்தனர். அனில் உடலை கைப்பற்றிய புனே போலீசாரின் விசாரணையில் அனாதையாக கார் நின்றிருப்பது தெரிந்து விசாரித்த போது, அது தவமணி கார் என கண்டுபிடித்தனர்.

ad

ad