புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

இன்னொரு அரசியல் புரட்சிக்கு தமிழர்கள் தயாராக வேண்டும்: சுமந்திரன் அறைகூவல்


உலகமே வியந்த ஒரு புரட்சியை ஜனவரியிலே தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டியதால் இப்பொழுது வருகின்ற தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, இன்னொரு புரட்சியை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது என்று கரவெட்டி கிளவிதொட்டம் பிள்ளையார் கோயில் முன்றலில் திரு. செல்லையா கந்தசாமி தலைமையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் திரு சுமந்திரன் தெரிவித்தார்.

தனது சொந்த மண்ணில், திரண்டு வந்திருந்த ஆதரவாளர்கள் மத்தியில் தொடர்ந்தும் உரையாற்றிய சுமந்திரன் அவர்கள் நேற்று மாலை பின்வருமாறு கூறினார்:
"எத்தனை தடவைகள் மக்கள் ஆணையை கேட்பீர்கள் என்று ஒருவர் என்னிடம் ஒரு கூட்டத்தில் கேட்டார்.
மக்கள் ஆணை அவசியமான காலத்தில் அதைக் கேட்போம். இது ஒரு சர்வஜென வாக்கெடுப்பு, தமிழினம் தனக்கான சமஸ்டியை அங்கீகரிக்கின்றதா இல்லையா என்று சர்வதேசமும், அரசாங்கமும் பார்த்துக்கொண்டு இருக்கின்றன.
77 இலே ஒரு மக்கள் ஆணையை கேட்டோம், அப்பொழுது மக்கள் அதனை வழங்கினார்கள், ஆனால் இப்பொழுது மாறுபட்ட வித்தியாசமான சூழ்நிலை காணப்படுகின்றது, ஒரு தலைமுறை வழங்கிய ஆணை,
இன்னொரு தலைமுறையின் எதிர்காலத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால், சர்வதேசம்
எமக்கு முழுமையாக ஆதரவாக உள்ள நிலையில், நாம் இப்பொழுது ஒரு முழுமையான மக்கள்
ஆணையை பெற வேண்டியுள்ளது.
ஜனவரியிலேயும் நாம் மக்களை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்படி கேட்டோம், நீங்கள் அதனை செய்தீர்கள். ஜனவரியிலே நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் என்பது அரசியல் தீர்வுக்கான தேர்தல் அல்ல.
நாட்டிலே நிலவிய சர்வாதிகார ஆட்சியை மாற்றவேண்டும் என்பது நமது அத்தியாவசிய தேவையாக இருந்தது, அதற்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கும் நேரடி சம்மந்தம் இருக்கவில்லை. ஆனால்
இனப்பிரச்சினை தீர்வு ஏற்பட வேண்டுமாக இருந்தால் முதலாவது பெரிய தடங்கலை அகற்ற வேண்டும், மகிந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற வரைக்கும் நாம் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகரக் கூட முடியாது, ஆகவே அந்தத் தடைக்கல்லை தமிழ் மக்கள் எம்மோடு இணைந்து அரசியல் புரட்சி மூலம் அகற்றினார்கள்.
அதனை தமிழ் மக்களின் வாக்குப்பலத்தினாலே செய்துமுடித்தோம்.
2009 இல் ஒன்றுமில்லாமல் அனாதரவாக்கப்பட்டு, உயிர்களைப் பலி கொடுத்து, உடமைகளைப் பறி கொடுத்து, நிலங்களை இழந்து நின்ற தமிழர்கள், 6 வருடங்களில் நாட்டின் தலைவிதியையே மாற்றும் சக்தி படைத்தவர்களாக, மாறுவதற்கு நாம் வழிகாட்டலை, தலைமையை வழங்கினோம். போரிலே வெற்றி பெற்றேன் என்று மமதையாக பேசிய ஜனாதிபதியை நமது மக்கள் தூக்கி எறிந்தார்கள்.
ஜனவரியிலே நடைபெற்ற புரட்சி இப்பொழுது அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியுள்ளது. இப்பொழுது நாம் நமது மக்களுக்காக, மக்களின் விடிவுக்காக தீர்வுத் திட்டத்தை முன்வைத்து இந்தத் தேர்தலிலே வாக்களிக்கக் கேட்கின்றோம்.
நீங்கள் இன்னொரு அரசியல் புரட்சியை நிகழ்த்திக் காட்ட வேண்டியுள்ளது. நீங்கள் எங்களுக்காக அல்ல, உங்களுக்காக, உங்களின் உரிமைக்காக வாக்களிக்க வேண்டி உள்ளது.
கலம் மக்ரே தயாரித்த சனல்4 இன் ஆவணப்படத்தை நான் உண்மையில்லாத ஆவணம் என்று சொன்னதாக இப்பொழுது ஒரு பொய்யை உலவ விட்டிருக்கின்றார்கள். இந்தப் பொய்யை பரப்புவதில் ஈடுபட்டவர்கள் பலர், இதற்குப் பொறுப்பாளிகள் பலர், ஒருவர் மட்டும் செய்த விடயம் அல்ல, அவர்களின் முகத்திரையை தேர்தல் முடிந்ததும் நாம்
கிழித்துக் காட்டுவோம். இன்னுமும் பொய்யுரைகள் வரும், மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ad

ad