புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

ஜெர்மனி வீழ்ச்சி 3ஆம் இடம் இத்தாலி16, சுவிட்சர்லாந்து17. பிரான்ஸ்23, இங்கிலாந்து 8, டென்மார்க் 25

பிபா’ உலக கால்பந்து ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய அணி 156வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. ‘நடப்பு உலக சாம்பியன்
’ ஜெர்மனி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி 160 புள்ளிகளுடன் 156வது இடத்தை கிர்கிஸ்தான் அணியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. ஒரு இடம் முன்னேறிய பாகிஸ்தான் அணி 171 இடத்தை பிடித்தது. வங்கதேச அணி, ஒரு இடம் பின்தங்கி 170வதுஇடத்தில் நடப்பு உலக சாம்பியன்’ ஜெர்மனி அணி, 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பெல்ஜியம் அணி 2வது இடத்துக்கு முன்னேறியது. அர்ஜென்டினா அணி ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டது. நான்காவது இடத்தில் கொலம்பியா நீடிக்கிறது. தலா ஒரு இடம் முன்னேறிய பிரேசில் (5வது இடம்), போர்ச்சுகல் (6), ருமேனியா (7), இங்கிலாந்து (8), வேல்ஸ் (9), சிலி (10), ஸ்பெயின் (11வது) அணிகள் ‘டாப்–11’ வரிசையில் இடம் பெற்றுள்ளன. ஏழு இடங்கள் பின்தங்கிய நெதர்லாந்து 12வது இடம் பிடித்தது.

ad

ad