புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

துவாரகேஸ்வரன் வித்யா கொலை வழக்கு சட்டத்தரணி கே வி தவராசாவுக்கு தொல்லை கொடுத்த]தாக வழக்கு

ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும் வர்த்தகருமான தியாகராசா துவாரகே;ஸ்வரன் மாணவி வித்தியர்வின் வழக்கை
திசைதிருப்பும் நோக்கில் சட்டத்தரணி கே. வி. தவராசாவை வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்தார் என்ற முறைப்பாட்டையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் சந்தேக நபருக்கு இன்று (புதன்கிழமை) 20 இலட்சம் ருபா பிணை வழங்கியது.
சந்தேகநபரான துவாரகேஸ்வரன், தனது சட்டத் தொழில்துறை கடமையில் சட்ட விரோதமாக தலையீடு செய்வதுடன் தனது தொழிலுக்கு இடைஞ்சல் செய்யும் நோக்கத்துடன் தரக்குறைவானதும் உண்மைக்குப் புறம்பானதுமான கூற்றுகளை இணையவலைத் தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் பரப்பி வருவதாகவும் அச்செயல்பாட்டினால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணி கே.வி தவராசா கொண்டு வந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முறைப்பாட்டாரின் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சஞ்சே கமகே உட்பட கணிசமான சட்டத்தரணிகள் ஆஜராகி நீதிமன்றின் கவனத்திற்கு; கொண்டு வந்ததாவது:
“புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது அதே வேளை சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பொலிசாரால் கொழும்பில் வைத்து மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் இதன் காரணமாக சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சந்தேகநபரான துவாரகேஸ்வரன் எந்தவிதமான சட்டரீதியான தலையீட்டுரிமையின்றி எமது கட்சிக்காரராண தவராசாவின் தொழில்ரீதியான கடமையில் தலையீடு செய்வதுடன் அவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்
இந்த சந்தேக நபருக்கு எதிராக இருபதுக்கு மேற்பட்ட முறைப்பாடுகளும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும் சந்தேகநபர் ஏற்கனவே குற்றவியல் வழக்கொன்றில் குற்றவாளியாக காணப்பட்டு ஒருவருட சிறைத் தண்டணை விதிக்கப்பட்டவர் என்பதுடன் இந்த சந்தேக நபருக்கு குற்றச் செயல்கள் என்பது சர்வ சாதாரணமான விடயமாகும், எனவே சந்தேகநபரை பிணையில் விடுவதாயின் கடும் நிபந்தணைகளை விதிக்கப்பட வேணடும்” என சட்டத்தரணிகள தமது வாதத்தை முன்வைத்ததையடுத்து நீதவான் நீதிமன்ற நீதிபதி நிசாந்த பீரிஸ் தலா 10 இலட்சம் ருபாய்படி இரண்டு சரீரபிணைக்கு அனுமதி வழங்கி மேலதிக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ம் திகதிக்கு ஒத்திவைத்தார்

ad

ad