புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

பிரிட்டன் நீதிமன்றின் தீர்ப்பினால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம் நெருக்கடியில்.


பிரிட்டன் நீதிமன்றின் தீர்ப்பினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் பிரிட்டன் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தது.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட வேறு நாட்டு பிரஜை ஒருவரை பிரிட்டன் சட்டங்களின் அடிப்படையில் பிரிட்டனில் கைது செய்து வழக்குத் தொடர அதிகாரமில்லை என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு இலங்கைக்கு எதிராக போர்க்குற்றவியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள, பிரிட்டன் அரசாங்கத்திற்கும்,  விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புகளுக்கும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் செல்லும் வன்னிப் போரில் பங்கேற்ற படையினரை கைது செய்ய சில காலத்திற்கு முன் இருந்தே திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போர்க்குற்றச் செயல்கள் குற்றம் சுமத்தி லண்டனில் கைது செய்யப்பட்ட ருவன்டா புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் ஜெனரல் கரென்ஸி கராதே தொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் கரென்ஸி சார்பில் முன்னாள் பிரிட்டன் பிரதமர்,  டோனி பிளயரின் மனைவி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
பிரிட்டன் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் ஜெனல் கரென்ஸி மீது போர்க்குற்றச் செயல்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன.
எனினும், ருவன்டா புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பிரிட்டனுக்குள் குற்றம் இழைக்கவில்லை என்பதனால் அவரை தண்டிக்க முடியாது எனவும், அவரை விடுதலை செய்யுமாறும் உத்தரவிடடு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என சிங்கள பத்திரிகை முதல்பக்க செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad