புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

'தமிழகத்தில் மீண்டும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்!'

தமிழக கடலோர மாவட்டங்களில் 27 முதல் 29-ம் தேதி வரை 3 நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ரமணன் கூறுகையில், '' வங்க கடலின் தென் மேற்கில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக தெற்கு அந்தமான் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இந்த மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் (27-ம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இதனால் வரும் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களுக்கும் சென்னை உள்பட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழையும், மிக கனமழையும் பெய்யும்'' என்றார்.

ad

ad