புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட போராட்டம் மீண்டும் வராது என்று எண்ணிக் கொண்டிருக்ககூடாது

துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட போராட்டம் மீண்டும் வராது என்று எண்ணிக்கொண்டிருக்ககூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி
. சிவமோகன் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே வைத்தியர் சி. சிவமோகன் இவ்வாறு தெரிவித்தார்.
எமது பிரதேசங்களில் இருக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என நம்பிதான் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்ததாகக் குறிப்பிட்ட அவர்,
புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு மற்றும் வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான கட்டிடம் போன்றன இராணுவத்தின் கைகளில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கைதிகள் விவகாரத்தில் கைதிகளை விடுதலை செய்வோம் என வாக்குறுதியளித்த ஜனாதிபதி தற்போது அரசியல் காரணங்களுக்காக விடுவிக்க முடியாது என தெரிவிக்கிறார்.
ஐ.நா சபையில் பொறுப்பு கூறுவோம் காணாமல் செய்யப்பட்டவர்களுக்கு முடிவுகள் காணப்படும் என தெரிவித்த இவர்கள் தற்போது மௌனம் சாதிக்கிறார்கள்.
இந்த அரசில் வெள்ளை வான்கள் மாத்திரம் இல்லாமல் போய் இருக்கின்றது. ஆனால், அதேசமயம் பொலிஸாரால் தமிழ் மக்கள் மீது அடக்கு முறை மறைமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பொலிஸார் தங்களின் அதிகாரங்களுக்கு மேலால் செயற்படுகிறார்கள். சாதாரண போக்குவரத்து பொலிஸார் கூட தமிழ் மக்களை தாக்கும் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்படுவதற்கு முன் சர்வதேச நாடுகள் பல்வேறு வாக்குறுதிகளை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியிருந்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்பதற்கு இன்று யாரும் இல்லை. நிறைவேற்றுமாறு சொல்வதற்கும் எந்த சர்வதேச அரசுகளும் தயாராக இல்லை.
சிறிய ஒரு துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட போராட்டம் எத்தனையோ ஆட்டிலறிகள் வரை சென்றது என்றால் மீண்டும் இந்த வரலாறுகள் வராது என்று இவர்கள் எண்ணிக்கொண்டிருக்க கூடாது.
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக ஒர் முடிவினை காண்பதற்காக அடிப்படையிலுள்ள சிறு சிறு பிரச்சனைகளுக்கு உடனடியாக அரசு தீர்த்து வைக்கவேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும், இராணுவம் காணிகளை விட்டு வெளியேற வேண்டும், எங்களது சுயநிர்ணய உரிமையை நோக்கி மீண்டும் ஒரு தடவை போராட தள்ளக்கூடாது, எமது இளைஞர்களிடையே கசப்புணர்வுகளை வளர்க்கக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ad

ad