புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

துருக்கியுடனான இராணுவ ஒத்துழைப்பை இடைநிறுத்தியது ரஷ்யா: பதற்றம் நீடிப்பு

துருக்கி மற்றும் சிரிய நாட்டு எல்லையில் ரஷ்ய போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்ப வத்தை அடுத்து ரஷ்யா துருக்கியுடனான
இராணுவ ஒத்துழைப்பை இடைநிறுத்துவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ரோவின் துருக்கி விஜயமும் உடன் ரத்து செய்யப்பட் டுள்ளது.
துருக்கி வானுக்குள் அத்துமீறி நுழைந்த தாக கூறியே ரஷ்யாவின் சுகொய் சூ-24 விமா னத்தை துருக்கி கடந்த செவ்வாயன்று சுட்டு வீழ்த்தியது. கடந்த அரை நூற்றாண்டில் நேட்டோ அங்கத்துவ நாடொன்றுக்கும் ரஷ்யா வுக்கும் இடையில் வெளிப்படையாகத் தெரிந்த மோதல் ஒன்றாக இது கருதப்படுகிறது.
துருக்கியின் இந்த செயல் 'முதுகில் குத்தும் வேலை" என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விமர்சித்தார்.
பதற்றத்தை அடுத்து ரஷ்ய பிஜைகள் துருக்கி செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கி பாதுகாப்பு அற்றது என்றும் விமானம் விழுந்த நிலையில் யுத்த கப்பல் ஒன்று கடற்கரையை நெருங்கி இருப்பதாகவும் ரஷ்யாவின் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் வான்-பாதுகாப்பு கட்டமைப்பு பொருத்தப்பட்ட கப்பல் ஒன்று மத்திய தரை க்கடல் பகுதியில் இனி நங்கூரமிட்டிருக்கும் என்றும் சிரியாவில் இருக்கும் ரஷ்யப் படை யினருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய இலக் குகள் அழிக்கப்படும் என்றும் ரஷ்ய பாதுகா ப்புத்துறை தெரிவித்துள்ளது.
சிரியாவில் வான் தாக்குதல்களை நடத்தும் விமானங்கள் இனி போர் விமானங்களின் பாது காப்புடன் செல்லும் என்றும் ரஷ்ய இராணு வம் தெரிவித்துள்ளது. குறித்த போர் விமா னம் சிரிய நிலப்பகுதியில்லடகியாவின் யமதி கிராமத்தில் விழுந்தது.
விமானம் தாக்கப்படும் முன்னர் அதிலிருந்து பரிசூட் முலம் வெளியேறி உயிர்தப்பிய ஒரு ரஷ்ய விமானியை சிரிய இராணுவம் மீட்டு அங்கிருக்கும் ரஷ்ய முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக பிரான்ஸின் ரஷ்ய தூதுவர் அலக்சான்ட்ரே ஒர்லோவ் நேற்று தக வல் அளித்திருந்தார்.
ரோ-1 வானொலிக்கு பேட்டி அளித்த அவர், 'விமானத்தில் இருந்த ஒருவர் பரிசூட் மூலம் தரையிறங்கியபோது காயத்திற்கு உள் ளாகி அங்கிருந்த ஜியாஹிதிக்களால் மிருக த்தனமாக கொல்லப்பட்டுள்ளார். மற்றையவ ரால் பாதுகாப்பாக உயிர்தப்ப முடிந்துள்ளது. தற்போது கிடைத்த தகவல்படி, அவர் சிரிய இராணுவத்தினரால் மீட்கப்பட்டு ரஷ்ய விமா னத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்" என்றார்.
விமானம் வீழ்த்தப்பட்ட பின்னர் துருக்கி மற்றும் சிரிய எல்லையில் தேடுதலில் ஈடுபட் டுக் கொண்டிருந்த ரஷ்ய ஹெலிகொப்டர் ஒன் றின் மீது சூடு நடத்தப்பட்டிருப்பதாக சிரிய அரச எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எம்ஐ- 8 ரக ஹெலிகொப்டர்கள் மூலம் இந்த விமானிகளை மீட்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டதாகவும் அந்த நடவடிக்கை யின்போது, ஒரு ஹெலிகொப்டர், சிறிய ரக துப்பாக்கியால் தாக்கப்பட்டு, அருகில் இரு ந்த பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட தாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் குறித்த ஹெலிகொப்டர் தரையி றங்கியதும் தாங்கள் அதனை டாங்கி - எதிர் ப்பு பீரங்கி மூலம் தகர்த்துவிட்டதாக கூறியி ருக்கும் சிரியாவில் உள்ள கிளர்ச்சிக் குழு ஒன்று, அதன் வீடியோ காட்சி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
முதுகில் குத்திய துருக்கி
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தி ற்கு பின்னர் துருக்கி மற்றும் ரஷ்யாவுடன் அந்தந்த நாடுகளின் நட்பு நாடுகளும் வார் த்தை போரில் ஈடுபட்டு வருகின்றன. இது சர் வதேச பதற்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சம்பவம் குறித்து முதலில் ரஷ்யாவை தொடர்பு கொள்ளும் முன் துருக்கி நேட்டோ வுடன் தொடர்பை ஏற்படுத்தியது குறித்து புடின் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
'தீவிரவாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குப வர்களால் முதுகில் குத்தப்பட்ட செயலாகவே இன்றைய இழப்பை நாம் பார்க்க வேண்டும். இன்று நடந்ததை சொல்ல வேறு எதனையும் கூற முடியாதிருக்கிறது" என்று தொலைக் காட்சியில் கருத்து வெளியிட்ட புடின் குறிப் பிட்டார்.
'எமது விமானத்தை துருக்கியின் எப்-16 nஜட் விமானம் வானிலிருந்து வானை தாக் கும் ஏவுகளை மூலம் தாக்கியது. துருக்கியின் எல்லையில் இருந்து 4 கிலோமீற்றர் சிரிய நாட்டுக்குள் வைத்தே விமானம் தாக்கப்பட்டி ருக்கிறது. எமது விமானிகளும் எமது விமா னங்களும் துருக்கிக்கு எந்தவகையிலும் அச் சுறுத்தலாக இருக்கவில்லை.
இந்த நிலையில் உடனடியாக எம்முடன் தொடர்பை ஏற்படுத்துவதை விடுத்து எமக்கு அறியக்கிடைத்த தகவலின்படி துருக்கி நேட்டோ கூட்டாளிகளின் பக்கம் எடுத்து சம்பவம் பற்றி ஆலோசனை செய்துள்ளது. நாம் அவர்களது விமானத்தை தாக்கியிருந்தால் இதற்கு மாறா கவே நடந்திருக்கும்" என்றும் புடின் குறிப்பிட் டுள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் சிரி யாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, இஸ் லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு மற்றும் அல் கொய்தா அமைப்பின் கிளையான அல் நுஸ்ரா முன்னணி மீதே தாக்குதல் நடத்துவதாக வலி யுறுத்துகிறது.
எனினும் ரஷ்யா பிரதானமாக சிரிய அரசு க்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களையே இலக்கு வைப்பதாக சிரிய அரச எதிர்ப்பாளர் கள்; மற்றும் மேற்குல சக்திகள்; குற்றம்சாட்டு கின்றன.
எல்லைகளில் அத்துமீறும் எவராயினும் அவ ர்களுக்கு எதிராக செயற்படுவது துருக்கியின் கடமை என்று துருக்கி பிரதமர் அஹமட் டவு டொக்லு குறிப்பிட்டுள்ளார்.
எவரேனும் எமது வான் மற்றும் நிலத்தில் அத்துமீறி செயற்பட்டால் அவர்களுக்கு எதி ராக எந்தவொரு நடவடிக்கையை எடுப்பதும் எமது தேசிய பணி என்பதோடு எமது சர்வ தேச உரிமையுமாகும் என்பது அனைவருக் கும் தெரியும்" என்று அவர் அங்காராவில் இருந்து தெரிவித்தார்.
'எமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க துரு க்கி பின்வாங்கப்போவதில்லை" என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இரு நாடுகளும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று நேட்டோ கோரியுள்ளது. நேட்டோவின் பொதுச் செய லாளர் Nஜன்ஸ் ஸ்டொல்டன்பேர் குறிப்பிடும் போது, 'துருக்கிக்கு எமது ஆதரவை வெளி யிடுவதோடு நேட்டோ அங்கத்துவ நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எமது ஆதரவை வெளியி டுகிறோம்" என்று வலியுறுத்தினார்.
துருக்கிக்கு அமெரிக்கா ஆதரவு
தமது எல்லையை பாதுகாக்கும் துருக்கி யின் உரிமைக்கு அமெரிக்க தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் எர்து கானுடன் தொலைபேசி மூலம் பேசிய அமெ ரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, துருக்கி தனது இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்வது அதன் உரிமை என்று தெரிவித்து ள்ளார்.
இவ்வாறான மோதல்களை தவிர்க்க ரஷ்யா மிதவாத சிரியா கிளர்ச்சாளர்கள் மீது தாக்கு தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஒபாமா வெள்ளை மாளிகையில் வைத்து ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.
மறுபுறம் ரஷ்யாவுடன்; நெருங்கிய நட்புக் கொண்டுள்ள சிரிய அரசு, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டன் மூலம் துருக்கி சிரியாவின் இறையாண்மையை மீறியதாக குற்றம்சாட்டி யுள்ளது.
ரஷ்ய போர் விமான துருக்கிக்குள் அத்து மீறி நுழைந்தது குறித்து மாறி மாறி குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் விமானம் கடை சியாக பறந்து கொண்டிருந்த வான் பகுதி பற்றி தமக்கு சாதகமான முரண்பட்ட செய்மதி படங்களை துருக்கியும் ரஷ்யாவும் வெளி யிட்டுள்ளன.
துருக்கி வான் பரப்புக்குள் அத்துமீறி நுழை ந்த அந்த விமானத்தின் விமானிகளுக்கு ஐந்து நிமிடத்திற்கு 10 தடவைகள் எச்சரிக்கை விடு க்கப்பட்ட பின்னரே சுடப்பட்டதாக துருக்கி குறி ப்பிட்டிருந்தது.
சிரியா உள்நாட்டு யுத்தத்தில் துருக்கி மற் றும் ரஷ்யா எதிர் எதிர் தரப்புகளில் உள் ளன. ரஷ்யா சிரிய ஜனாதிபதி பஷிர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவாக செயற்படுவதோடு துருக்கி அசாத் அரசுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறது.

ad

ad