புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

தாக்குவதற்கு முன் எந்த எச்சரிக்கையையும் துருக்கி விடுக்கவில்லை: ரஷ்ய விமானி பகிரங்க குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு)

ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய போது துருக்கி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று உயிர் பிழைத்த விமானி மறுப்பு தெரிவித்து உள்ளார்.
துருக்கியின் ‘எப்–16’ ரக போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த ரஷியாவின் போர் விமானம் ஒன்றை சிரியா எல்லையில் நேற்று சுட்டு வீழ்த்தியது.
துருக்கி வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால்தான் ரஷியாவின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
சிரியாவில் ரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கிக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், ரஷ்ய விமானம் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக நாங்கள் 10-முறை எச்சரிக்கை விடுத்தோம். துருக்கியின் எல்லையை தாண்டிய 5 நிமிடங்கள் எச்சரிக்கை நீடித்தது என்று துருக்கி தெரிவித்தது.
இந்நிலையில் எச்சரிக்கை விடுத்தோம் என்ற துருக்கியின் கூற்றை, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து உயிர் தப்பிய விமானி மறுத்து உள்ளார்.
இதுகுறித்து விமானி முராக்தின் பேசுகையில், துருக்கி வான் எல்லையை விமானம் மீறுவதற்கு எந்த ஒரு வழியும் கிடையாது. விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு முன்னதாக எந்த ஒரு எச்சரிக்கையும் துருக்கியால் விடப்படவில்லை என்று கூறி உள்ளார். விமானத்தில் இருந்த மற்றொரு விமானி உயிரிழந்து விட்டார்.

ad

ad