புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

3-வது டெஸ்ட்; இந்திய சுழலில் சிக்கியது தென் ஆப்பிரிக்கா

இந்தியா – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் இரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோனுக்கு பதிலாக அமித் மிஸ்ராவும், ஸ்டூவர்ட் பின்னிக்கு பதிலாக பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும் சேர்க்கப்பட்டனர். இதனால் இந்திய அணியில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் (இஷாந்த் ஷர்மா) மட்டுமே இடம் பெற்றார். தென்ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் கைல் அப்போட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 2–வது பிரதான சுழற்பந்து வீச்சாளராக சிமோன் ஹார்மருக்கு இடம் கிட்டியது.

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இந்திய அணி இந்திய அணி முதல் இன்னிங்சில் 78.2 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்காவும், சுழற்பந்து வீச்சில் தடுமாறியது. நேற்றைய முடிவில் 9 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.

2 வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் நேற்றைய நிலையே காணப்பட்டது. இந்திய அணியின் சுழலை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் விழி பிதுங்கி நின்றனர். இன்று ஒரு ரன்னை மட்டுமே சேர்த்த தென் ஆப்பிரிக்க்க அணி மேற்கொண்டு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எல்கர் 7 ரன்னிலும், அம்லா 1 ரன்னிலும், டி வில்லியர்ஸ் ரன் எதுவும்  இன்றியும் வந்த வேகத்தில் திரும்பினர்.  இதன் பின்னர் வந்த டு பிளஸிஸ்(10 ரன்கள்) நிலைக்கவில்லை.  இதனால், தென் ஆப்பிரிக்க அணி 35 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

21 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 43 ரன்களை மட்டுமே சேர்த்து 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி தரப்பில் அஷ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.  4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியைவிட 172 ரன்கள் பின் தங்கியுள்ளது. டுமினி 21 ரன்களுடனும் டேன் விலாஸ் ரன் எதுவும் இன்றியும் களத்தில் உள்ளனர்.

ad

ad