பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அப்டெல் ஹமீது அபாவுத் சுட்டுக்
கொலை செய்யப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பாரிசில் கடந்த 13ம் திகதி நடந்த தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஐஎஸ் தீவிரவாதியான அப்டெல் ஹமீது அபாவுத் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று அபாவுத் பதுங்கியிப்பதாக கூறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்து பொலிசார் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பெண் தீவிரவாதி உட்பட மூன்று பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
எனினும் அபாவுத் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்படாத நிலையில், இன்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரெஞ்சு உள் விவகாரத்துறை அமைச்சர் Bernard Cazeneuve,
பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை நேற்று நடந்த தேடுதல் வேட்டையில் பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
28 வயதான பெல்ஜியம் நாட்டவரான அபாவுத்தின் உடலை கைப்பற்றிய பொலிசார், உரிய சோதனையின் முடிவில் உறுதி செய்துள்ளனர்.
|