புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2015

தாக்குதலுக்கு ஈடுகொடுக்காமல் ஐ.எஸ்.ஐ.எஸ் நிழலரசத் தலைநகரை விட்டு வெளியேறுகின்றார்கள்!

பிரான்ஸ் மற்றும் ரஸ்யாவின் தொடர் விமானத் தாக்குதலால் தங்களது தலைநகராக இதுவரை பயன்படுத்தி வந்த சிரியாவின் ரக்காவிலிருந்து
ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்களும் குடும்பங்களும் பாதுகாப்புக் கருதி வெளியேறி வருகின்றன.
அதிலும் குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் தளபதிகளின் குடும்பங்கள் இருந்த இடமான அல் சடாடியில் இருந்து தப்பி வேறிடங்களிற்குச் செல்கின்றனர். நிலத்தை கையகப்படுத்தி நிழலரசை வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் குப்பைகளையகற்றுவதிலிருந்து மருத்துவமனைகள் வரையும் சகல கட்டமைப்புக்களையும் உருவாக்கியதுடன்,
அதேபோல வங்கிகளிலிருந்து காவல்துறை மற்றும் பல்கலைக்கழகம் வரையான பாடவிதானங்களை உணவு பங்கீடு, எரிபொருள் பங்கீடு என பலதுறைகளையும் விரைவாக நியமித்திருந்தாலும், அவர்களது பயங்கரவாதத்தாக்குதல் முறைகள் அவர்களிற்கு ஆபத்தாக அமைந்து விட்டன.
இப்போது தங்களது கட்டமைப்புக்களையெல்லாம் மெல்லக் கைவிட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் ஈராக்கில் தங்களின் கட்டுப்பாட்டிலுள்ள நகராக மொசூல் நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்த விடயத்தை சிரியாவிலுள்ள மனிதவுரிமைக் கண்பானிகமும் உறுதி செய்து, ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்களது குடும்பங்களும் முக்கிய தலைவர்களும் அவர்களது நிழலரசத் தலைநகரை விட்டு வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளது.தாக்குதலுக்கு ஈடுகொடுக்காமல் ஐ.எஸ்.ஐ.எஸ் நிழலரசத் தலைநகரை விட்டு வெளியேறுகின்றார்கள்!

ad

ad