புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2015

கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு எதிரான போரில் குதிக்கின்றார்!!

கனடா ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான விமானத் தாக்குதல்களை நிறுத்தும் என்ற அண்மைய முடிவிற்கு மாறான முடிவுகளை
அது எடுப்பதற்கு தற்போதைய பரிஸ் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது.
அதன் பிரகாரம் குர்திஸ் போராளிகளை பயிற்றுவிப்பதற்கான படையணி ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தற்போது அங்கே 600 வரையிலான படையினரே நிலைகொண்டிருப்பதாகவும், அவர்களில் 69 பேர் இவ்வாறான பயிற்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அவர்கள் துருக்கியில் இடம்பெற்ற மாநாட்டையடுத்து பிலிப்பைன்ஸ் நாட்டிற்குப் போகும் விமானத்தில் வைத்தே இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
தனது அரசாங்கத்தின் திட்டத்தின் பிரகாரம் எத்தனை படைகள் அங்கே நிலை கொள்ளப்போகின்றன, அவர்கள் எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றார்கள் போன்ற விடயங்கள் பின்னரே பரிசீலீக்கப்படும் எனவும் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்தார்.

ad

ad