-

19 நவ., 2015

ரஷ்யாவின் பயணிகள் விமானத்தை பழச்சாறு பாட்டில் குண்டுகளால் வீழ்த்திய ஐ.எஸ்.தீவிரவாதிகள்

எகிப்து நாட்டின் ஷரம்-எல்-ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன்
கடந்த 31-ந் தேதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ-321 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 224 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமானத்தை நாங்கள் தான் சுட்டுவீழ்த்தினோம் என்று ஐஎஸ் தீவிரவாதிகள் கூறிவந்த நிலையில், ஆரம்பத்தில் இதனை ரஷ்யா மறுத்தது. சில நாட்களுக்கு முன்னர், வெடிகுண்டு தாக்குதல் மூலம் விமான விபத்து நிகழ்ந்துள்ளது என்று ரஷ்யா அரசு அறிவித்தது. 

ரஷ்யா விமானத்தை வீழ்த்தியது எப்படி என்பது குறித்து ஐ.எஸ் அமைப்பின் தபிக் இதழில்  தகவல்கள் வெளியாகி யுள்ளது. அதில், விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி அன்னாசி பழச்சாறு பாட்டிலில் வெடி குண்டுகளை மறைத்து வைத்து எடுத்துச்சென்று வெடிக்கவைத்ததாக கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

ad

ad