புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2015

திருகோணமலை வதை முகாமை பார்வையிட்டோம்! ஐ.நா நிபுணர்கள் குழு


காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பிலான எதிர்பார்ப்பு உரிமைகளை, பெற்று கொடுப்பதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கிறது.
பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்கியிருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னர் இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பை ஒன்றை நடத்தினர்.
இதன்போது, கருத்துரை நிபுணர்கள் காணாமல் போன தமது உறவுகள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மிக நீண்ட நாளாக காத்திருப்பதாக குறிப்பிட்டனர்.
பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம் பெற்று பல ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதன் காயங்கள் சமூகத்துக்குள் ஊடுறுவி உறவுகளில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்த குழுவின் உதவி தலைவர் போனாட் டகைமீ தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பில் இதுவரைக்கும் பொறுப்பு கூறும் நடவடிக்கையில் பாரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது.
காணாமல் போனவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற உண்மை தெரியவரவில்லை.
எனினும், புதிய அரசாங்கத்தின் இது குறித்த திட்டங்கள் வரவேற்கப்பட கூடியன.
இந்தநிலையில், உண்மை, நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் காணாமல் போகும் சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம் பெறுவதை தடுப்பது போன்ற விடயங்களை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு கோரிக்கை விடுத்தது.
தமது விஜயத்தின் போது, அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பு கிடைத்ததாக குறிப்பிட்ட குழுவினர் அரசாங்கம் தமது உறுதி மொழிகளையும் அர்ப்பணிப்புக்களையும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதுவே முன்பு காணாமல் போனோர் உரிமைகள் தொடர்பில் ஏற்பட்ட தோல்விகளுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை பெற்று கொடுக்கும்.
எனவே, இலங்கை வரலாற்று முக்கியமான இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இது நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு உதவ கூடியதாக இருக்கும்.
உள்ளூர் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் உள்ளடங்கும் பரிந்துரையை தாம் வரவேற்பதாகவும் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பில் உண்மையான நடைமுறைகளை ஐக்கிய நாடுகள் குழு வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, அதிகாரிகள், இராணுவம், பாதுகாப்பு மற்றும் படைப்பிரிவினர் ஆகியோர் காணாமல் போன தமது உறவுகளை தேடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது அச்சுறுத்தல்களையும் சித்திரவதைகளையும் மேற்கொள்ள கூடாது.
தாம் சந்தித்த பின்னர், காணமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணாமல் சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியாது என குறிப்பிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையினர் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் காணாமல் போன சம்பவங்களை தடுப்பதற்கான சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் காணாமல் போனோருக்கான சர்வதேச நியதிகளை பாதுகாக்க உதவும்.
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.
அத்துடன் அந்த சட்டத்துக்கு ஊடாக காணாமல் போக செய்யப்பட்டோர் மற்றும் ரகசிய முகாம்கள் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கேட்டுக் கொண்டனர்.
தாம் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மாத்தளை, காலி ஆகிய இடங்களுக்கு சென்று சந்தித்ததாக அவர்கள் குறிப்பிட்டள்ளனர்.
அவர்கள் இன்னமும் தமது உறவுகளின் நிலை தெரியாது அதற்கான எதிர்பார்ப்பை கொண்டிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தமது விஜயத்தின் முழுமை அறிக்கை 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் சமர்பிக்கப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிபுணர் குழு திருகோணமலையில் கடற்படை வதை முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இடத்தை தாம் பார்வையிட்டதாக குறிப்பிட்டனர்.
இந்த முகாமில் ரகசியமாக ஆட்களை தடுத்து வைக்க கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இங்கு சித்திரவதைகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த முகாம் பெரும்பாலும் 2009 ஆம் இறுதி யுத்ததின் பின்னர் 2010 ஆம் ஆண்டளவில் நிறுவகிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த முகாமுக்குள் பல்வேறு வசதிகளும் ஆட்களை தடுத்து வைக்க கூடிய நிலத்துக்கடியிலான சுரங்கங்களும் அமைந்திருந்தன.
அத்துடன் 20100725 என்ற இலக்கம் சுவர் ஒன்றில்,  எழுதப்பட்டிருந்ததை கொண்டு முகாம் 25 ஜூலை மாதம் 2015 ஆம் ஆண்டளவியல் நிறுவகிக்கப்பட்டிருக்கலாம் என்ற எடுகோளை மேற்கொள்ள முடியும் என்றும் ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு இன்றைய கொழும்பு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

ad

ad