புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2015

தமிழீழ விடுதலையை தடுக்கும் ஐநா தீர்மானங்கள்-மதுரை கருத்தரங்கம்.

12273677_1199833493367441_5404933989086222113_o-620x413
நவம்பர் 15 – 2015, ஞாயிறு காலை 11 மணி முதல் 3 மணி வரை மதுரை காலேஜ் ஹவுஸ் , திருவள்ளுவர் அரங்கில் “தமிழீழ விடுதலையைத்
தடுக்கும் ஐ.நா தீர்மானங்கள் 2012-2015” எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது,
இதில் மே பதினேழு இயக்க தோழர் விவேகானந்தன். தமிழக மக்கள் முன்னணி அமைப்பின் தலைவர் அரங்க. குணசேகரன் அவர்கள், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி ஆகியோர் விரிவான கருத்துரை நிகழ்த்தினர்.
தமிழீழ விடுதலை போராட்டத்தை நசுக்கிய செயல்முறையை நாம் ஆராய்ந்து எவ்வாறு அது தமிழ் நாட்டில் தமிழ் தேசிய எழுச்சியை பொது எதிரியை நோக்கி நகர விடாமல் நம்மை மடை மாற்றுகிறது எனும் கோணத்திலும், ஐ.நா அவையில் தமிழர் தரப்பு கோரிக்கையை இல்லாமல் செய்ய உடந்தையாக இருக்கும் சக்திகள் பற்றியும் விரிவாக தோழர். திருமுருகன் எடுத்துரைத்தார்.
ஐ.நா தீர்மானங்கள் குறித்த மே பதினேழு இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடுகள் ஒவ்வொருவருடமும் இருந்ததையும் தெளிவாக விவரித்தார். தமிழ் தமிழர் இயக்கம்., த.பெ.தி.க. தி.வி.க, தமிழ் தேசப் பேரியக்கம், SDPI , புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிப் புலிகள், தமிழ் மாணவர் இயக்கம், தமிழ் தேச மக்கள் கட்சி, தமிழ் தேச மக்கள் குடியரசு இயக்கம், நாணல் நண்பர்கள், திராவிட இயக்க தமிழர் பேரவை என சுமார் 80 தோழர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர். இறுதியாக உயர்நீதிமன்றதில் தமிழ் போராட்டக்குழு வழக்கறிஞர், மாணவர் தோழர்கள் (பகத் சிங், முருகன், ஐயப்பன், சுனில்குமார் ) மரியாதை செலுத்தப்பட்டது. தமிழகத்தில் புயல் மழையால் பலியான மக்களுக்கு மௌன அஞ்சலியுடன் நிகழ்வு துவங்கியது.905758_1199833720034085_8594453990480180484_o12265829_1199833546700769_1959022561231986833_o

ad

ad