20 மே, 2016

மிக குறைந்த ஓட்டில் வெற்றியை இழந்த 14 வேட்பாளர்கள்!

தமிழக சட்டசபை தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர்.

தமிழக சட்டமன்றத்திற்கு 232 தொகுதிகளில் கடந்த 16 தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (19-ம் தேதி) நடைபெற்றது. இதில், 134 தொகுதிகளை கைப்பற்றி முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது. தி.மு.க. கூட்டணியோ 98 தொகுதிகளை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தங்களது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:
ராதாபுரம்தி.மு.க.அப்பாவு49
காட்டுமன்னார்கோவில்விடுதலை சிறுத்தைகள்திருமாவளவன்87
திண்டிவனம்அ.தி.மு.க.ராஜேந்திரன்101
செய்யூர் (தனி)அ.தி.மு.க.முனுசாமி304
கோவில்பட்டிதி.மு.க.சுப்பிரமணியன்428
கரூர்காங்கிரஸ்சுப்பிரமணியன்441
ஒட்டப்பிடாரம்தி.மு.க. கூட்டணி புதிய தமிழகம்கிருஷ்ணசாமி493
பெரம்பூர்தி.மு.க. கூட்டணி பெருந்தலைவர் மக்கள் கட்சிஎன்.ஆர்.தனபாலன்519
திருவிடைமருதூர் (தனி)அ.தி.மு.க.சேட்டு532
திருநெல்வேலிஅ.தி.மு.க.நயினார் நாகேந்திரன்601
திருமயம்அ.தி.மு.க.வைரமுத்து766
பரமத்தி வேலூர்அ.தி.மு.க.ராஜேந்திரன்818
திருப்போரூர்தி.மு.க.விஸ்வநாதன்950
பர்கூர்தி.மு.க.கோவிந்தராஜன்982