தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று 6-வது முறையாக முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம்
வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் அம்மா அவர்களுக்கு வணக்கம்.
தமிழக  சட்டசபைக்கான தேர்தலில் 6வது முறையாக தாங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.