20 மே, 2016

ஜெயலலிதா வெற்றி!! வாழ்த்திய குஷ்பு

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தியுள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான
குஷ்பு.
பள்ளி விடுமுறையில் இருக்கும் மகள்களுடன் குஷ்பு இன்று வெளிநாட்டிற்கு சுற்றுலா கிளம்புகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு. திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக ஊர், ஊராக பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போன்று வராவிட்டாலும் அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டுள்ளார் குஷ்பு.