புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2016

தடுப்புக் காவலில் உள்ள விடுதலைப் புலிகளை விடுவிக்க அமெரிக்காவின் உதவியை நாடும் சம்பந்தன்!

எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்வது தொடர்பில் அமெரிக்காவின் உதவியை
நாடியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிடேஜ் ஆகியோருக்கிடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது வடக்கு மற்றும் கிழக்கின் தற்போதைய நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கில் பெரும்பாலான இடங்களில் பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் பலவந்தமாக நிலை கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பொதுமக்களின் பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்காவின் தலையீடு அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தடுப்புக்காவலில் இருக்கும் விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை தொடர்பிலும் அமெரிக்காவின் அழுத்தங்களை பிரயோகிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ad

ad