20 மே, 2016

நீங்கள் பெற்றுள்ள வெற்றி சரித்திர சாதனைமிக்க வெற்றியாகும்;ஜெயலலிதாவுக்கு செல்வம் அடைக்கலநாதன் வாழ்த்து

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இலங்கை பாராளுமன்ற துணை சபாநாயகர் செல்வம் அடைக்கலநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தகவல் அறிந்ததும் அவர் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழக சட்டசபை தேர்தலில் நீங்கள் பெற்றுள்ள வெற்றி சரித்திர சாதனைமிக்க வெற்றியாகும். ஒட்டு மொத்த தமிழர்களும் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருப்பதையே இந்த தேர்தல் வெற்றி பிரதிபலிக்கிறது.
தொடர்ச்சியாக நீங்கள் இரண்டாவது தடவை வெற்றி பெற்றிருப்பது தமிழர்களிடம் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அது மட்டுமின்றி தமிழர்கள் ஆதரவால் நீங்கள் தமிழ்நாட்டில் புதிய ஜனநாயக அரசியல் கலாசாரத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். மேலும் நீங்கள் மற்ற அரசியல்வாதிகளுக்கு முன் மாதிரியாக திகழ்கிறீர்கள்.
ஜனநாயக உலகில் உங்கள் நிர்வாகத்திறனும் முன் மாதிரியாக உள்ளது. உலகத் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.