புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2016

அப்துஸ் சலாம் முதலாவது விசாரணைக்காக இன்று நீதிமன்றில் ஆஜர்!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் அப்துஸ்சலாமை, இன்று (
வெள்ளிக்கிழமை) முதலாவது விசாரணைகளுக்காக பொலிஸார் பரிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் பரிஸில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து, பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் அப்டெஸ்சலாம் பதுங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி பிரஸ்ஸெல்ஸின் Molenbeek மாவட்டத்தில் பெல்ஜியப் பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் வேட்டையின்போது, அப்டெஸ்சலாம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்ட அப்டெஸ்சலாமை பரிஸில் உள்ள முக்கிய இடத்தில் தனிச்சிறையில் அடைத்து வைத்திருந்ததாகவும், அங்கு 24 மணிநேர சிசிரிவி கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டதுடன், அவரது சிறை பிரத்தியேக பாதுகாப்பு விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாக வடிவமைக்கப்பட்டதாகவும் பிரான்ஸின் நீதி அமைச்சர் Jean-Jacques Urvoas தெரிவித்திருந்தமை கூட்டிக்காட்டத்தக்கது.
கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பரிஸின் கால்பந்து மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல்களினால் 130 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad