புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2019

இரவோடு இரவாக 77 வெளிநாட்டு அகதிகள் வவுனியாவுக்கு அனுப்பி வைப்பு

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அகதிகளில் ஒரு தொகுதியினர், நேற்றிரவு வவுனியா நோக்கி
நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்படவுள்ள இந்த அகதிகளில் சுமார் 77 பேர் இரண்டாம் கட்டமாக வவுனியா நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அகதிகளில் ஒரு தொகுதியினர், நேற்றிரவு வவுனியா நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்படவுள்ள இந்த அகதிகளில் சுமார் 77 பேர் இரண்டாம் கட்டமாக வவுனியா நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனர்.

அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியா நோக்கி நகர்த்தப்படும் இரண்டாம் கட்ட அகதிகள் இரவு 11 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என அறிய முடிகின்றது.

கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிகு நீர்கொழும்பில் இருந்து நகர்த்தப்பட்ட நிலையிலேயே இரண்டாம் கட்டமாக சுமார் 77 பேர் நகர்த்தப்பட்டுள்ளனர்.

ad

ad