புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2019

அரச நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் சேலை அணிவது கட்டாயம்!

அரச நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் சாரி அணிவது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் வரும் போது ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும்.

என்பதுடன் பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை அணிந்திருத்தல் வேண்டும் என குறித்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

ad

ad