இலங்கைக்கு எதிர்வரும் இந்திய பிரதமர் மோடி வருகை தரவள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மீண்டும் பிரதமராக பதவியேற்ற மோடியின் பதவியேற்பு நிகழ்விற்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரி தலைமையில் அமைச்சர்களான மனோ, ஹக்கீம் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பின் போதே எதிர்வரும் 9ம் திகதி மோடி இலங்கை வருவார் என்பதை உறுதிப்படுத்தியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான மோடியின் வருகை கவனை ஈர்த்துள்ளது.