புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2019

கிளிநொச்சி வாள்வெட்டு - ஆயுதங்கள், வாகனங்களுடன் ஐவர் கைது!

கிளிநொச்சி - செல்வா நகரில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 பேர் வெட்டிப் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரு வாள்கள், சில கூரிய ஆயுதங்களும் கப் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்று என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் கிளிநொச்சி பொலிஸார் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் செல்வா நகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் கர்ப்பிணி உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற 15 க்கும் மேற்பட்டவர்கள் வாள் வெட்டில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு இரு மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு தற்காலிக வீடும் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad