புலிகளை வஞ்சகமாக வீழ்த்தியதை போல எங்களை வீழ்த்த இயலாது. நாங்கள் அதனால்தான் கட்டமைக்கப்படாத கெரில்லா போர் முறையை தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்கிறார்.
அமெரிக்க சீன வல்லாதிக்கங்கள் பலூச் பகுதிகளால் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை எதிர்த்து ஆயுத போராட்டம் நிகழ்த்துகிறார்கள்.
பலூச் கான் என்கிற பலூச் விடுதலை போராளியின் பேட்டி அல்-ஜஸிராவில் 'பாகிஸ்தானின் மற்றும் ஒரு யுத்தம்' எனும் தலைப்பில் 2012 இல் வெளியானது.
அதில் பலூச் விடுதலை போராளி நாம் வைக்கும் அதே கேள்விகளை பாகிஸ்தானுக்கு முன்னர் வைக்கிறார்.
இங்கே யார் பாகிஸ்தானி? சிந்திகள் இருக்கிறார்கள், பஞ்சாபிகள் இருக்கிறார்கள், பஷ்த்தூன்கள் இருக்கிறார்கள், பலூச்கள் இருக்கிறார்கள். யார் பாகிஸ்தானி?
அப்படி ஒரு இனம் இருக்கிறதா? தேசிய இனங்களை சுரண்டி கொழுக்க திணிக்கப்படும் கருத்தியலே பாகிஸ்தானி என்கிறார்.
இதில் சிறப்பு யாதெனில், நம்மை போலவே தேசிய இன விடுதலைக்கு போராடுவதோடு மட்டுமன்றி, பலூச் இனத்தின் மிகப்பெரிய இனக்குழு பிராஹுய்.
அவர்களின் மொழி தமிழ் மொழிக்குடும்பத்தில் இருந்து பிறந்தது, எண்ணற்ற சொற்கள், வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளாகவே இருக்கின்றன.
சிந்து சமவெளி நாகரீகம் தமிழர்களது என்பதன் வாழும் சான்று இந்த பழங்குடிகள்.
இதில் கூடுதல் சிறப்பு யாதெனில், பலூச் விடுதலை போராட்டத்தை ஸ்பான்சர் செய்வதே இந்தியாவின் RAW தான். NSA அஜித் தோவல்தான் சூத்திரதாரி.
என்றாவது ஒரு நாள், வெகுதூரம் இல்லை, தெற்காசிய பிராந்தியத்தில் தேசிய இன விடுதலைக்கு போராடும் இனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய கூட்டு ராணுவத்தை அமைக்கலாம்.
அப்போதும், இந்தியர்கள் நம் ஆயுதத்தை வாங்கி நம்மையே வீழ்த்தி விட்டார்கள் என்று பேசிக்கொண்டு இருப்பார்கள், அமைதிப்படைக்கு பின்னர் கதைத்தது போலவே..
தேசிய இன விடுதலை என்பது பரிணாம வளர்ச்சியின் ஊடாக ஏற்படும் இயற்கையின் தாகம். இயற்கையை தடை போட்டவன் எவனுமில்லை