அத்துடன் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொரோனா கொத்தணி குறித்து விசாரணை நடத்துவதற்காக, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணியில் எவ்வாறு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்துமாறு, சட்டமா அதிபர், பதில் காவற்துறைமா அதிபருக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இதன் அடிப்படையில், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி காவற்துறை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.