யாழ்ப்பாண மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மகேசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன் போது, கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பின் பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
திருமணம் – வீட்டில் நடத்த 50 பேருக்கு மட்டும் அனுமதி
மரணசடங்கு – 25 பேருக்கு மட்டும் அனுமதி (2 தொடக்கம் 3 நாட்களில் நிறைவு பெற வேண்டும்) வெளிமாவட்டத்தில் இருந்து வருகை தருவதை தவிர்க்கவும்.
நடைபாதை வியாபாரம் – மரக்கறி வியாபரத்திற்கு மட்டும் அனுமதி.
தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்க தடை.
திறந்த சந்தைக்கு அனுமதி இல்லை.
விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்கவும்.
மக்கள் கூட்டங்கள், பொது நிகழ்வுகளை ஒத்திவைக்கவும்.
பேருந்துகளில் இருக்கை அளவுக்கு மட்டும் அனுமதி.
இந்த செயலணி கூட்டத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், வடமாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் கேதீஸ்வரன், வடமாகாண உளநல சேவை பணிப்பாளர் கேசவன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.