முக்கிய பிரமுகர் ஒருவரின் மகனின் திருமணம் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது, பொலிஸாரின் தலையீட்டை அடுத்து திருமண வைபவம் இடைநிறுத்தப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை கேள்வியுற்று பொலிஸார் அங்குச் சென்ற வேளை, மண்டபத்தில் 35 பேர் மட்டுமே இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், திருமணம் உள்ளிட்ட பொது வைபவங்களை நடத்தமுடியாது. அந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தையும் மீறியே திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்