நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்பாக (உள்ளிருப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர்) பரிசின் வீதிகளில் சில ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ”வெளியில் செல்ல அனுமதி இல்லை” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளமையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .
“ஒவ்வொருவரும் உள்ளிருப்பை வெறுக்கின்றோம்!” என அவர்கள் கோஷமிட்டதோடு, “சுதந்திரம்” பறிபோகின்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அத்தோடு, வீதிகளில் இருந்த குப்பைத்தொட்டிகளை கொட்டி, உதைந்து வீழ்த்தி தங்களது கோபத்தினை வெளிப்படுத்தினர்.
காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அகற்றினர்