புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2020

பருத்தித்துறை 750 வழித்தட தனியார் பேருந்துகள் இடைநிறுத்தம்

Jaffna Editor
பருத்தித்துறை - யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தொற்றாளருடன் நேரடித் தொடர்பிலிருந்த யாராவது தனியார் பேருந்து சேவையில் கடமையாற்றினால் பயணிகளுக்கு தொற்று ஏற்படலாம் என்ற அடிப்படையில் இவ்வழித்தட தனியார் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.



கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது.கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்த பல தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்களாகப் பணியாற்றும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்த நிலையில் அவர் கிராமத்தில் நடமாடியுள்ளார்.இந்த நிலையில் ராஜ கிராமத்தில் 60 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்பது நினைவூட்டத்தக்கது.

ad

ad