புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2020

கொழும்பு கரையோர பொலிஸ் நிலையம் மூடப்பட்டது; 10 அதிகாரிகளுக்கு கொரோனா! 83 பொலிஸார் தனிமைப்படுத்தல்

Jaffna Editor
பொலிஸ் அதிகாரிகள் 16 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொழும்பு கரையோர பொலிஸ் நிலையம் இன்று மூடப்பட்டது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 83 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகள் பேலியகொட மீன்சந்தைக்குச் சென்றுவந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கரையோர பொலிஸ் நிலையம் மூடப்பட்டிருப்பதால் கொட்டாஞ்சேனை மற்றும் துறைமுக பொலிஸ் நிலையங்கள் அதற்கான பணிகளைத் தற்காலிகமாக மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரேனா தாக்கத்தின் பின்னர் மூடப்பட்ட மூன்றாவது பொலிஸ் நிலையம் இதுவாகும்.

ad

ad