புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2020

பிரான்ஸில் வீட்டு வாடகை(APL)மற்றும் ,கல்விக்கான உதவி (Bours )பெறுவோருக்கு (Les étudiants boursiers) 150 ஈரோக்கள் விசேட கொடுப்பனவு

www.pungudutivuswiss.com
பிரான்ஸில் வீட்டு வாடகை(APL)மற்றும் ,கல்விக்கான உதவி (Bours )பெறுவோருக்கு (Les étudiants boursiers) 150 ஈரோக்கள் விசேட கொடுப்பனவு இந்த வாரம் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.கொரோனா நெருக்கடியை அடுத்து வருமான இழப்புகளைச் சந்தித்துள்ள குடும்பங்களுக்கு இரண்டாவது கட்டமாக விசேட நிதி உதவிகள் பல வழங்கப்படும் என்று அதிபர் மக்ரோன் கடந்த ஒக்ரோபர் மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
அதன்படி நாடு முழுவதும் 4.1 மில்லியன் குடியிருப்பாளர்கள் பல விசேட கொடுப்பனவுகளைப் பெறுகின்றனர். அதில் ஒன்று ‘பூஸ்’ எனப்படும் கல்விக்கான நிதி உதவி பெறும் மாணவருக்கான 150 ஈரோக்கள் மேலதிக உதவித்தொகை ஆகும். இக்கொடுப்பனவு மாணவர்களது வங்கிக் கணக்குகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் (27-11-2020) வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, வீட்டு வாடகை உதவி(APL) பெறும் குடும்பங்களுக்கும், உதவி பெற்றுவரும் 18-25 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கும் 150 ஈரோக்கள் விசேட உதவி வழங்கப்படுகிறது.இதைவிட வீட்டு வாடகை உதவி(APL) பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தலா 100 ஈரோக்கள் விசேட தொகையும் இந்த வாரம் கிடைக்கவுள்ளதும் குறிப்பிடதக்கது...

ad

ad