புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2021

மக்களைக் காக்கவே போரிட்டோம்! - ஜெனிவாவில் பதிலளிக்க தயாராகும் அரசாங்கம்.

www.pungudutivuswiss.com
தாங்கள் மக்களை பாதுகாப்பதற்காகவும் மக்களின் ஆணையின்படியும் விடுதலைப்புலிகளிற்கு எதிராக போரிட்டதை கருத்தில் கொள்ளவேண்டும் என அரசாங்கம் மனித உரிமை பேரவையிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளது.
என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்தார்.


தாங்கள் மக்களை பாதுகாப்பதற்காகவும் மக்களின் ஆணையின்படியும் விடுதலைப்புலிகளிற்கு எதிராக போரிட்டதை கருத்தில் கொள்ளவேண்டும் என அரசாங்கம் மனித உரிமை பேரவையிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளது. என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்தார்.

இலங்கையின் இறைமை மற்றும் உள்விவகாரங்களில் தலையிடுதல் போன்ற வழமையான செய்திகளை முன்வைக்கவுள்ளதுடன் சில வழங்ககூடிய விடயங்களை வழங்கவுள்ளது.

இலங்கையிலிருந்து ஜெனீவாவிற்கு செல்லவுள்ள பிரதிநிதிகள் அல்லது இணையவழியில் கலந்துகொள்ளவுள்ள பிரதிநிதிகள் யார் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு பிரதானஅனுசரணை வழங்கிய நாடுகள் மீண்டும் ஒரு புதிய யோசனையை முன்வைக்கவுள்ளன.

விடுதலைப் புலிகளே தற்கொலை குண்டு தாக்குதலை உருவாக்கினார்கள் தற்கொலை அங்கி தற்கொலை தாக்குதலில் ஈடுபடும் பெண் உறுப்பினர்கள் போன்றவற்றை உருவாக்கினார்கள். இரு உலக தலைவர்களை கொலை செய்தார்கள்- 30 வருட யுத்தத்தில் மாதாந்தம் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 250 பேர் உயிரிழந்தனர் .

2009 மே மாதம் முதல் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதன் அர்த்தம் என்னவென்றால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மூலம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன,என்னை பொறுத்தவரை வாழ்வதற்கான உரிமை என்பது மனித உரிமையை விட மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நீங்கள் முதலில் உயிர்வாழ்ந்தால் தான் மனித உரிமையை அனுபவிக்க முடியும்.

ஆனால் சர்வதேச சமூகம் போதியளவு பொறுப்புக்கூறலின்மை நல்லிணக்கமின்மை இழப்பீடுகள் வழங்கப்படாமை மற்றும் இந்த விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கான உள்ளுர் பொறிமுறை அமைக்கப்படாமை போன்றவை குறித்து இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுகின்றது எனவும் வெளிவிவகார செயலாளர் தெரிவித்தார்

ad

ad