புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2021

24 பிரதேசங்கள் நாளை முதல் முடக்கம்!

www.pungudutivuswiss.com

நாளை அதிகாலை 4 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சில தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி

ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

அதன்படி, கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு, கழுத்துறை, அம்பாறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 மாவட்டங்களைச் சேர்ந்த 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை காலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ad

ad