புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2022

அரசாங்கம்தான் போதைவஸ்திற்கான அனுமதியை வழங்கியுள்ளது - ஈ.பி.டிபி

www.pungudutivuswiss.com

போதைப்பொருள் விநியோகத்திற்கு அரசாங்கம் தான் அனுமதி அளித்துள்ளது. அரசாங்கம் அந்த அனுமதியை இரத்துச் செய்தால் போதைப்பொருள் எமது நாட்டிற்குள் வராது என ஈ.பி.டி.பி கட்சியின் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் நடராசா தெரிவித்துள்ளார்.

இன்றைய சபை அமர்வில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கிண்டலாக  சபையில் நடனமும் ஆடினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கமும் அரசியலுமே இதனை நடத்துகிறது. இவ்வாறு இருக்கையில் இங்கு நாங்கள் அப்பாவி மக்களை வீதியில் இறக்கி போதைவஸ்திற்கு எதிரான போராட்டம் செய்து எந்த பிரியோசனமுமில்லை.

இலங்கை முழுவதும் மதுவை ஒழிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். இவ்வாறு நாங்கள் கடிதம் அனுப்பி அங்கேயே இந்த அனுமதியை நிறுத்தினால் இந்த அப்பாவி மக்கள் ஏன் பாதிக்கப்படுகிறார்கள்.

நாங்கள் ஊர் ஊராக கஞ்சா ஒழிக்க வேண்டும் என்று சென்றால் ஊரில் உள்ளவர்கள் நீங்கள் பொலிஸா? என கேட்பார்கள். எனவே அரசாங்கம் தான் இதனை தடுக்க வேண்டும் - என்றார்.

ad

ad