அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச் செயல்படுவதைத் தடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
www.pungudutivuswiss.comயாழில் இருந்து கடந்த 28ஆம் திகதி கொழும்பு நோக்கி பயணித்த போது வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரின் அனுபவம் இன்றைய ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வந்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தனியாகச் செய்து கொண்டிருக்கின்ற கருமங்களைச் சேர்ந்து செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
www.pungudutivuswiss.comஅபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, அரச சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் சேவை யாப்பு ஆகியவற்றுக்கு அமைய, போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அனைத்துத் தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும், ஆட்சேர்ப்பின் இரண்டாவது கட்டத்தின்போது நடைபெறும் நேர்முகப் பரீட்சையில் பாடசாலைகளில் சேவை செய்யும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அனுகூலமான விசேட வாய்ப்பு ஒன்று கிட்டவுள்ளதாகவும் பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் போது மேலும் விடயங்களைத் தெளிவுபடுத்திய பிரதமர்,
நீதிமன்றச் சட்டச் செயற்பாட்டின் இறுதிக் கட்டளையின்படி, இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளின் அதிகபட்ச வயது எல்லையான 40, இந்தச் சந்தர்ப்பத்திற்காக மாத்திரம் 45 வயது வரை மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களுக்கமைய, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக வயது எல்லையைத் திருத்தியமைத்து, தனித்தனியாகப் பரீட்சைகளை நடத்தி, ஆசிரியர் சேவையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர் சேவையின் 3.1.அ தரத்திற்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
www.pungudutivuswiss.comஅபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது.
சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 214 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 1,433 பாதுகாப்பு தங்குமிடங்களில், 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் இப்போதைய காலநிலை அனர்த்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவைப்படும் பட்ஷத்தில் உடனடி அவசர உணவு தேவை பூர்த்தியை வழங்க விரும்புகின்றது .பிரதேச சபை உறுப்பினர் நாவலன் அல்லது குணாளன் ஊடாக தொடர்பு கொள்ளலாம்
www.pungudutivuswiss.com
புங்குடுதீவு குறிகாட்டுவான் செல்லும் பாலம் உடைப்பு . நயினாதீவு நெடும்தீவுதொடர்புகள் பயணங்கள் துண்டிப்பு குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு செல்லும் வீதியில் நடுவுதுருத்தியில் அமைந்துள்ள பாலம் உடைந்துள்ளது வாகனகள் செல்லமுடியாதுள்ளது . இதனால் நெடும்தீவு நயினாதீவு பயணங்கள் பெரும்பாலும் 1 வாரத்துக்கு தடையாகும்
www.pungudutivuswiss.comவடக்கை முழுமையாக நோக்கி நகரும் வரலாற்றில் முதல் தடவை.. நாகமுத்து பிரதிபராஜா
டிட்வா புயலானது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது தற்போது மட்டக்களப்புக்கும் அமபாறைக்கும் இடைப்பட்ட மகா ஓயா பகுதியில் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு திசையில் நகரும். தற்போதைய நிலையில் இந்த புயலின் மையப்பகுதி முழுவதும் நிலத்தின் ஊடாகவே நகரும் வாய்ப்புள்ளது. ஆனாலும் நகர்வுப் பாதை இன்னமும் இறுதியாகவில்லை.
இந்த புயலின் மையம், மற்றும் உள்வளையம் ஆகியன வடக்கு மாகாணத்தின் முழுப் பகுதியையும் உள்ளடக்கியே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தற்போதைய நகர்வின் படி எதிர்வரும் 02.12. 2025 அன்று வட தமிழகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது புயலின் மையம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் உள்ளமையால் இப்பகுதிகளில் ஒரு அசாதாரண அமைதி நிலவும். ஆனால் அது நிலையானதல்ல.
இந்த புயலினால் நாடு முழுவதற்கும் எதிர்வரும் 29.11.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும்.
அம்பாறை க்கு நாளை பிற்பகல் முதல் படிப்படியாக மழை குறையும். ஆனாலும் எதிர்வரும் 30.11.2025 வரை மழை கிடைக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எதிர்வரும் 29.11.2025 முதல் மழை படிப்படியாக குறைவடையும்.
ஆனால் திரு கோணமலை மாவட்டத்திற்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும்.
வவுனியா மாவட்டத்துக்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும். எதிர்வரும் 01.12.2025 அன்றும் வவுனியாவின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும். எதிர்வரும் 01 மற்றும் 02.12.2025 அன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலைமைகளின் படி மன்னார் மாவட்டத்துக்கு நாளை முதல் எதிர்வரும் 01.12.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்தோடு அனுராதபுரத்தில்ஸகிடைக்கும் கனமழையும் குளங்களின் வான் பாயும் நீரும் ஏற்கெனவே குறிப்பிட்டபடி அருவியாற்றின் முகத்துவாரம் மற்றும் கீழ் நீரேந்து பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும்.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் படிப்படியாக இன்று இரவு முதல் கனமழை முதல் மிகக்கனமழையை எதிர்கொள்ளும். இது எதிர்வரும் 02.12.2025 வரை தொடரும்.
குறிப்பு: இன்னும் சிறிது நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் கன மழை கிடைக்க தொடங்கும்.
தற்போது திருகோணமலை மற்றும் வடக்கு மாகாணத்தில் காற்று மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் வீசுகின்றது. இது நாளை இன்னமும் அதிகரிக்கும்.
நாளையும் தென், ஊவா மற்றும் சபரகமுவா மாகாணங்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும். ஆனால் நாளை மறுநாள் பிற்பகல் முதல் மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும். ஆனால்
எதிர்வரும் 30.11.2025 முதல் மேல மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் மழை குறைவடையும்.
இந்த புயலின் நகர்வுப்பாதை இதுவரை இல்லாதது போன்று அமையும் என தோன்றுகின்றது. இது அசாதாரணமானது. வட மாகாணம் முழுவதையும் உள்ளடக்கிய வடக்கு நோக்கிய நகர்வு முற்றிலும் புதியது. 1867ம் ஆண்டு இலங்கையில் முதல் முதலாக நில அளவைத் திணைக்களத்தின் கீழ் விஞ்ஞான முறைகளிலான வானிலை அவதானிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இது போன்ற நகர்வுப் பாதையை எந்த புயலோ, தாழமுக்கமோ கொண்டிருந்ததில்லை. வரலாற்றில் இதுவே முதல் முறை.
பகல் 11 மணி (Srilanka)குறிகட்டுவான் இறங்குதுறைக்கும் முனையப்புலம் இந்துமயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பாலம் தற்சமயம் உடைந்து காணப்படுகிறது மோட்டார் சைக்கிள் தவிர்ந்த எந்த வாகனங்களும் செல்லவேண்டாம்.புங்குடுதீவில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்கிறது புயல் காற்றினால் வீடுகளின் கூரைகளின் ஊடே நீர் கசிவதால் வீடுகள் முழுமையான ஈரம் சமைக்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்
கேரதீவு குறிகாட்டுனான் நடுவுதுருத்தி நுணுக்கள் சங்கத்தங்கேணி கழுதைப்பிட்டி வல்லன் மடத்துவெளி கிழக்கு பகுதிகளில் வெள்ளம் குளங்கள் நிரம்பி வழிகின்றன துருசுகளின் மேலால் நீர் பாய்கின்றன . நெல்வயல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன
எச்சரிக்கை
சகலவிதமான பயணங்களையும் தவிருங்கள் வீட்டிலேயே இருங்கள் உங்கள் வீடு ஆறு குளம் கடற்கரைகளில் இருக்குமானால் வேறு கோயில்கள் பாடசாலைகள் உறவினர் வீடுகளுக்கு சென்று விடுங்கள் சிறுவர்களை கவனமாக பராமரியுங்கள் .வீட்டு கூரை சீட் மின்கம்பிகள் என்பவற்றில் கவனம் செலுத்துங்கள் (ஈரத்துடன்) மின்தொடுப்புகளில் வயர்களில் காய் வைக்காதீர்கள்
யாழ்-கண்டி நெடுஞ்சாலை திடீரென்று மூடப்பட்டதன் காரணமாக தென் பகுதிக்கான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் தென்பகுதிக்கு சென்றுகொண்டிருந்த மக்கள் நடுவழியில் அவதியுறுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதனடிப்படையில் கொழும்பு நோக்கி செல்லும் பயணிகள் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து புகையிரதம் மூலம் பயணத்தை தொடரலாம் என்று ஓமந்தை புகையிரத நிலையம் அறிவித்துள்ளது. தற்போது பல பயணிகள் ஓமந்தை புகையிரத நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி விடுத்த சந்திப்பில் பங்கேற்பதற்குத் தாம் இணங்கியிருப்பதாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும், அதற்குரிய பதிலை விரைவில் அனுப்பி வைக்கவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் தெரிவித்துள்ளன