-

2 ஜன., 2013



அழகிரி பேட்டி எதிரொலி! அதிமுக சுவர் விளம்பரங்களை அழித்த திமுகவினர் மீது வழக்கு

புத்தாண்டையொட்டி நேற்று (01.01.2013) மதுரையில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிப்ரவரி மாதம் வரும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் சுவர் விளம்பரம் இருக்கிறது. ஆனால் ஜனவரியில் வரும்


3 குழந்தைகள் உயிரிழப்பு! பெற்றோர்களும் தற்கொலையா என போலீசார் விசாரணை! விழுப்புரம் அருகே சோகம்!
விழுப்புரம் அருகே பனப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சத்யா, சங்கீதா, தியாகராஜன் ஆகிய 3 குழந்தைகளின் சடலம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


சிகரெட் பழக்கத்தை கைவிட்ட ரசிகர்களுக்கு நன்றி - ரஜினி
புத்தாண்டில் ரசிகர்களை சந்திந்த ரஜினி: புகை பிடிப்பதை கைவிட்டதற்கு பாராட்டு

       புத்தாண்டையொட்டி புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட ரசிகர்களையும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களையும் ரஜினி சந்தித்து பேசினார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகேவந்திரா திருமண மண்டபத்தில் இச்சந்திப்பு நடந்தது. 

ஐவரி கோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில் புதுவருட கொண்டாட்டங்களுக்காக மக்கள் ஒன்று கூடிய போது ஏற்பட்ட சன நெரிசலில் 60 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வானவேடிக்கையை பார்ப்பதற்காக ஃபெலிக்ஸ் ஹூபுவேட் பூங்னி

2013ல் சைந்தவியுடன் திருமணம்


பாடகி சைந்தவியை 2013-ம் ஆண்டுதான் மணமுடிக்கப் போவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
வெயில் படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்.

NCHRO அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் சிறந்த மனித உரிமைப் போராளிக்கான முகுந்தன் சி.மேனோன் விருது இவ் ஆண்டு (2012) டாக்டர் எஸ்.பி.உதயகுமாருக்கு அளிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துவோம்...

இந்த 2012 ஆண்டிற்கான சிறந்த மனிதராக "times of india "நாளிதழும் விஜய் தொலைக்காட்சியும் அன்பிரிகினிய நமது அய்யா சுப.உதயகுமார் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளது .இந்த ஊடகங்களுக்கு நமது நன்றிகளை தெரிவித்துகொள்வோம்.
  """அன்பிற்கினிய தமிழ் சொந்தங்களே தயவு செய்து நம்மை காக்க ஒரு ரட்சகர் வருவார் என்று எதிர்பார்த்து காத்திராமல்...நம் வழிகாட்டிகளை வரலாற்று புத்தகங்களில் தேடாமல் ......நம் கதாநாயகர்களை வெள்ளித்திரையில் தரிசிக்காமல் ....நம் அருகே நின்று நமக்காக வாழும் இம்மாமனிதரை அரவணைத்துக்கொள்ளுங்கள்...அன்பு செலுத்துங்கள்...கொஞ்சம் முயன்று பின்பற்றுங்கள்...
இந்த 2012 ஆண்டிற்கான சிறந்த மனிதராக "times of india "நாளிதழும் விஜய் தொலைக்காட்சியும் அன்பிரிகினிய நமது அய்யா சுப.உதயகுமார் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளது .இந்த ஊடகங்களுக்கு நமது நன்றிகளை தெரிவித்துகொள்வோம்.
"""அன்பிற்கினிய தமிழ் சொந்தங்களே தயவு செய்து நம்மை காக்க ஒரு ரட்சகர் வருவார் என்று எதிர்பார்த்து காத்திராமல்...நம் வழிகாட்டிகளை வரலாற்று புத்தகங்களில் தேடாமல் ......நம் கதாநாயகர்களை வெள்ளித்திரையில் தரிசிக்காமல் ....நம் அருகே நின்று நமக்காக வாழும் இம்மாமனிதரை அரவணைத்துக்கொள்ளுங்கள்...அன்பு செலுத்துங்கள்...கொஞ்சம் முயன்று பின்பற்றுங்கள்...


தடுப்பில் உள்ள மாணவர்களை கைவிட்டது யாழ்.பல்கலை! கலைப்பீடத்தை இம் மாதம் ஆரம்பிக்க தீர்மானம்!


யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலைப்பீடத்தை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை கலைப் பீடத்தை

பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை - புதிய ஆலோசனை முன்மொழிந்தார் தமிழக முதல்வர்!


பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோரை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.
மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு

முன்னாள் போராளியை விபச்சாரியாக்கிய விகடனுக்கு திறந்த மடல்!

ஈபிடிபியின் தினமுரசாகிறதா ஆனந்த விகடன்?



 “.........அந்தப் பேட்டியே ஒரு புனைவு எனவும் விகடன் துரோகம் இழைத்துவிட்டது எனவும் பேட்டியின் வார்த்தைகளுக்குள் உளவியல் கபடி ஆடிப்பார்த்தனர்.....” இவை ஆனந்த விகடன் சஞ்சிகையில் அதன் ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்த வரிகள். குறித்த வரிகள் ஈழத்தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவர் மனதில் இருந்தும் மறக்க முடியாதவை. வித்தயா ராணி என்ற ஈழத்து

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள் 16 பேர் தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். 
உண்ணாவிரதம் இருக்கும் அகதிகளுடன்பழ.நெடுமாறன் சந்திப்பு

அவர்களை தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் சந்தித்து ஆறுதல் கூறி உடல்நலம் விசாரித்தார். அப்போது உண்ணாவிரதம் இருக்கும் அகதிகள் தங்களது நிலை குறித்து தெரிவித்தனர்.
 அவர்களில் உடல்நிலை சோர்வடைந்த தவதீபன், காண்டீபன்,

மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!- யாழில் சம்பவம்
யாழ். நல்லூர் பிரதேசத்தில் தனது மகளை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1 ஜன., 2013

கனடாவில் பனியில் விழுந்தது பேருந்து: 9 பேர் பலி

வான்கூவருக்குப் போன சுற்றுலாப் பேருந்து சாலையோரத்தின் சரிவில் கவிழ்ந்ததால் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இருபது பேர் படுகாயமுற்றனர்.

ட்டாசு ஆலைகள் அடிக்கடி விபத்தில் சிக்கி, உயிர்ப்பலிகளை தொடர்ந்து வாங்கினாலும், அரசு அதிகாரிகளின் குறட்டை கலைவதாக இல்லை. இதன் விளைவு... சேலம் மாவட்ட வேடன்கரட்டில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பெண்களும் குழந்தைகளும் பெரியவர்களுமாய் சாந்தி, சூர்யா, சிவகாமி, ஈஸ்வரி, தீபா, தங்கம், கேசவன், விஜயா, சதீஷ் ஆகிய 9 பேர் வெடித்துச் சிதறியிருக்கிறார்கள். 

வேடன்கரடு கிராமம், சேலம் மாவட்ட மேச்சேரி அருகே இருக்கிறது. அங்கு சாந்தி என்ற விதவைப் பெண்மணி அனுமதிக் காலம் முடிந்தும் வாணவேடிக்கை தொழிற்சாலையை நடத்திவந்தார். அன்று வழக்கம் போல் 17 தொழிலாளர்கள் வேலை பார்த்துக்



           26-ந் தேதியின் பிற்பகல் பொழுது. 

நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி நந்தகுமார், குற்றவாளிக் கூண்டில் நின்ற காட்டுராஜாவையும் வெட்டும்பெருமாளையும் ஒருமுறை பார்வையால் அளந்தார்.



          ""ஹலோ தலைவரே... 2013ஆம் வருடத்தை தமிழக மக்கள் ரொம்ப நம்பிக்கையோடு எதிர்பார்த்துக்கிட்டி ருக்காங்க. ஏன்னா, 2012 ரொம்ப சோதனையா அமைஞ்சிடிச்சி.''thx nakeeran



            மாவீரர் தினம் கொண்டாடிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து சித்ரவதை செய்து கொண்டி ருக்கிறது இலங்கை ராணுவம். 

நவம்பர் 27-ந்தேதி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மாவீரர் நாள் வெகு விமரிசையாக நினைவு கூரப்பட்டது. எப்போதும் போல இந்த வருடமும் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டனர் யாழ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள். ஆனால் அதனை அறிந்த ராஜபக்சே, "இலங்கையில் மாவீரர் நிகழ்வுகள் எங்கும் நடக்க கூடாது' என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம் கட்டளையிட்டார். அமைச்சரும் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தச் சொல்லி தமிழர் தாயகப் பிர தேசத்தில் நிலைகொண்டிருக்கும் ராணுவ தளபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதே சமயம் யாழில் சுற்றுப்பயணம் செய்த ஹெக லியரம்புக்வெல, "மாவீரர் நாள் தினத்தை யாழ் பல்கலை மாணவர்கள் அனுஷ்டிக்கக்கூடாது. தீபங் களையும் ஏற்றக்கூடாது' என்று எச்சரித்தார். ஆட்டோக்களில் மைக் கட்டி இந்த எச்சரிக்கையை யாழ் முழுவதும் ஒலிபரப்பு செய்தனர் ராணுவத்தினர்.


ஆனால், இந்த எச்சரிக்கைக்கெல்லாம் பயப்படாத யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டப்படி வழக்கம் போல மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக நடத்தினர். இதனால்

யாழ்.பாசையூர் கொலைச் சம்பவம்: 15 வயது சிறுவனுக்கு விளக்கமறியல்
யாழ். பாசையூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த 15 வயது சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.

இலங்கைப் படையினர், தமிழ்ப்பெண்கள் மீது நடத்தும் பாலியல் தாக்குதலை நிறுத்துமாறு மிச்செய்ல் ஒபாமாவிடம் கோரிக்கை
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பெண்கள், படையினரால் பாலியல் துன்புறுததல்களுக்கு உள்ளாக்கப்படும் விடயத்தில் தலையிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாரியாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

புத்தாண்டே வருக! வருக!!
*********************************
புத்தாண்டே வருக! வருக!!
புதுப்பொலிவு தருக! தருக!!
பொங்கும் இன்பம் பெருக! பெருக!!
புவியில் மனிதம் மலர்க! மலர்க!!

திங்கள் முகம் மலரட்டும்!
தேசம் எங்கும் விடியட்டும்!!
கங்குல் யாவும் விலகட்டும்!
காலம் எம்மைத் தேற்றட்டும்!!

குனிந்த தலைகள் நிமிரட்டும்!
குவிந்த கரங்கள் உயரட்டும்!!
சொரிந்த கண்ணீர் காயட்டும்!
சுற்றம் யாவும் சிரிக்கட்டும்!!

மக்கள் வாழ்வு சிறக்கட்டும்!
மாநிலம் எங்கும் செழிக்கட்டும்!!
மாறாத் துன்பம் நீங்கட்டும்!
மக்கள் மனங்கள் மகிழட்டும்!!

புத்தாண்டே வருக! வருக!!
புதுப்பொலிவு தருக! தருக!!
பொங்கும் இன்பம் பெருக! பெருக!!
புவியில் மனிதம் மலர்க! மலர்க!!
******************
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
31/12/2012









புத்தாண்டே வருக! வருக!!
*********************************
புத்தாண்டே வருக! வருக!!
புதுப்பொலிவு தருக! தருக!!
பொங்கும் இன்பம் பெருக! பெருக!!
புவியில் மனிதம் மலர்க! மலர்க!!

திங்கள் முகம் மலரட்டும்!
தேசம் எங்கும் விடியட்டும்!!
கங்குல் யாவும் விலகட்டும்!
காலம் எம்மைத் தேற்றட்டும்!!

குனிந்த தலைகள் நிமிரட்டும்!
குவிந்த கரங்கள் உயரட்டும்!!
சொரிந்த கண்ணீர் காயட்டும்!
சுற்றம் யாவும் சிரிக்கட்டும்!!

மக்கள் வாழ்வு சிறக்கட்டும்!
மாநிலம் எங்கும் செழிக்கட்டும்!!
மாறாத் துன்பம் நீங்கட்டும்!
மக்கள் மனங்கள் மகிழட்டும்!!

புத்தாண்டே வருக! வருக!!
புதுப்பொலிவு தருக! தருக!!
பொங்கும் இன்பம் பெருக! பெருக!!
புவியில் மனிதம் மலர்க! மலர்க!!

ad

ad