தமிழகத்தில் 72.83 % வாக்குகள் பதிவு : பிரவீண்குமார் அறிவிப்பு
தமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் 72.83 % வாக்குகள் பதிவாகியுள்ளன.தமிழகத்தின் 39 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7மணிக்கு துவங்கிய
தமிழகத்திலும் மிக விரைவில் அரசியல் மாற்றம் வரும் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, ''உலகத்தின் தலை சிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. 16வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்த வாக்குப் பதிவு, இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. 5 கோடியே 37 இலட்சத்து 33 ஆயிரம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்கிறார்கள். நான் என்னுடைய பிறந்த ஊராகிய கலிங்கப்
1 மணி நிலவரம்: 46 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என தகவல்
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிக்கும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடகியது. மதியம் ஒரு மணி நிலவரப்படி தமிழகத்தில் 46 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தனது வாக்கை பதிவு செய்தார். அவரது தோழி சசிகலாவும் உடன் வந்து வாக்களித்தார். முதல்வர் வருகையை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்கு சாவடியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வாக்குப்பதிவு செய்தார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தயாளுஅம்மாள், மு.க.தமிழரசு, அமிர்தம், செல்வம், செல்வி, அவரது மகள் எழிலரசி ஆகியோரும் வந்து அதே வாக்கு சாவடியில் வாக்களித்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விருதுநகர் தொகுதி வேட்பாளர் வைகோ, கலிக்கப்பட்டியில் வாக்களித்தார். அவருடன் அவர் மகன் வையாபுரியும் சென்று வாக்களித்தார்.
காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கியது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை: ஜெயலலிதா பேட்டி
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கியது.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜெயலலிதா வாக்களித்தார். அவருடன் அவரது தோழி சசிகலாவும் வந்திருந்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை. வாக்குப்பதிவு அமைதியாக, முறையாக நடைபெற தேர்தல் ஆணையத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
'வெற்றி எங்களுக்கு': வாக்களித்த பின்னர் மு.க.அழகிரி
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரையில் தனது இல்லத்துக்கு அருகே உள்ள முத்துப்பட்டி அரசு பள்ளியில் காலை 10.30 மணிக்கு வாக்களித்தார். அவரது குடும்பத்தினரும் அவருடன் வந்து வாக்களித்தனர்.
வாக்களித்துவிட்டு வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அப்போது அவர், 'வெற்றி எங்களுக்கு' என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.
ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
கலைஞர் வாக்களித்தார்
திமுக தலைவர் கலைஞர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது தாயார் தயாளு அம்மாள், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் சென்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்குச் சாவடியில் வாக்கினை பதிவு செய்தார்.
பொதுபல சேனா - ரிஷாத் பதியுதீன் இடையே மோதல் முற்றுகிறதா?
இலங்கையில் கடும்போக்கு பௌத்த பிக்குகளுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் இடையேயான மோதல் போக்கு மேலும் வலுத்து வருவது போலத் தோன்றுகிறது.
ரியல் மாட்ரிட் பயெர்னை 1-0 என்ற ரீதியில் வென்றது . ஆனால் ?
இன்று மெட்ரிடில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தின் முதல் விளையாட்டில் 1-0 என்ற ரேத்யில் வென்றுள்ளது. 19 வது நிமிடத்தில் பஞ்சமா அடித்த கோல் அது .பயெர்ன் இடைவேளை வரை 75 வீதம் பந்தை அகப்படுத்தி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.தவராசா மாகாண சபை உறுப்பினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற இந்த வைபவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மற்றும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’மதவாதத்திற்கும், ஜனநாயகத்திற்கு நடைபெறும் போர்தான் இந்த தேர்தல். இந்த பேரில் கலைஞர் தலைமையிலான
மே 6 -ல் பாடகி சின்மயி திருமணம்- மலைசாதி மக்களுக்காக அறக்கட்டளை
பிரபல திரைப்பட பின்னணி பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்துகொள்கிறார். ராகுல் ரவீந்திரன், ‘மாஸ்கோவின் காவேரி,’ ‘விண்மீன்கள்,’ ‘வணக்கம் சென்னை’ ஆகிய தமிழ் படங் களிலும், சில தெலுங்கு