இந்த பணத்தொகையின் இலங்கை ரூபா பெறுமதி 21 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த பண நோட்டுகள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கிப்பதுடன், இந்த கடத்தல் சம்பவத்துடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த போலி பண நோட்டுகளை ஒரு டொலர் 284 ரூபா என்ற வீதத்தில் மாற்றுவதற்காக தயாராக இருந்துள்ளதுடன், உள்நாட்டு வர்த்தகர்களை ஏமாற்றி இந்த டொலர் நோட்டுகளை அவர்கள் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் நாளை (09) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். |