![]() மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி பலத்த சேதமடைந்துள்ளது. |
-
13 ஜன., 2024
மத்திய ஆபிரிக்க குடியரசில் கவிழ்ந்து கிடக்கும் இலங்கை விமானப்படையின் ஹெலி
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் வழக்கு! [Saturday 2024-01-13 06:00]
![]() பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டு மக்களின் அடிப்படை பேச்சு உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார் |
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 19 பேர் காயம்! - 60 பேர் தப்பியோட்டம்
![]() கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தப்பிச் சென்றவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
12 ஜன., 2024
கெஹலியவை பாதுகாத்த 113 எம்.பிக்களும் தேசத் துரோகிகள்!
![]() மருந்து கொள்வனவு திருட்டில் ஈடுபட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவையும் இந்தக் குழுவையும் பாதுகாக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கைகளை தூக்கினர். இந்த 113 பேரும் நாட்டுத் துரோகிகள், தேசத் துரோகிகள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். |
புலிகளுக்குப் பணம் கொடுத்தது யார்? சபையில் வாதப் பிரதிவாதம்.
![]() விடுதலை புலிகளுக்கு ஆயுதம், பணம் வழங்கியது யார் என்பதை நாங்கள் தெரிவிக்க தேவையில்லை. அதனை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டு அறிந்துகொள்ளங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை கேட்டுக்கொண்டார். |
பிரித்தானியாவை சூழும் 14 ஆண்டுகள் இல்லாத கடும் குளிர்!
![]() 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவை பிரித்தானியா வரும் வாரங்களில் எதிர்கொள்ள இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்பொழிவையும் கடுமையான ஆழ்ந்த குளிரையும் எதிர்கொள்ள உள்ளது. |
ரொறன்ரோவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
![]() குறித்து எச்சரிக்கை ரொறன்ரோவில் எதிர்வரும் நாட்களில் கடும் பனிப் புயல் தாக்கம் ஏற்படும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் காற்றுத் தாக்கம் காரணமாக சுமார் 20 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது |
தமிழரசு தலைவர் என்ன முடிவு?
அம்பியுலன்ஸ் படகு வர தாமதமானதால் இளைஞன் உயிரிழப்பு!
![]() உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியுலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அனலை தீவு பகுதியில் புதன்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றது |
துறைமுக அதிகாரசபையின் செலவில் 50 எம்.பிக்கள் 2 கப்பல்களின் உல்லாசப் பயணம்!
![]() துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியகாவுல்லா என்ற இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை உல்லாசப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டினார் |
Top News
![]() இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். |
தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு! - இன்றைய பேச்சு தோல்வி.
![]() இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவை ஒருமனதாக நடத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து தலைவர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படவுள்ளது |
சபரிமலைக்குச் சென்ற யாழ். ஐயப்ப பக்தர் நடுவானில் மரணம்!
![]() கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானம் மூலம் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் நடுவானில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை சேர்ந்த 49 வயதுடைய மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். |
10 ஜன., 2024
கறுப்பு உடையுடன் சபைக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்! [Tuesday 2024-01-09 18:00]
![]() மக்கள் மீது அதீத வரிச்சுமை சுமத்தப்படுவதாக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்பு ஆடை அணிந்து சபைக்கு வந்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும, மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வரம்பற்ற வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். |
மக்களின் சாபத்தினால் அச்சம் - எம்.பி பதவியில் இருந்து விலகினார் சமிந்த விஜேசிறி!
![]() ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பதவி விலகுவதாக விலகுவதாக அறிவித்துள்ளார் |
நாளை இலங்கை வரும் பிரித்தானிய இளவரசி! - யாழ்ப்பாணமும் செல்கிறார்.
![]() பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய, அவரது விஜயம் அமையவுள்ளது. |
நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது! - தமிழ் எம்.பிக்கள் எதிர்ப்பு.
![]() தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறை வேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. |
வித்தியா கொலை வழக்கு - மேன்முறையீட்டு மனுக்கள் 22ஆம் திகதி விசாரணை!
![]() 2015 ஆம் ஆண்டு புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. |