சனி, ஆகஸ்ட் 30, 2014

தீர்மானங்கள் எட்டப்படாததால் இரண்டாவது நாளாக தொடரும் பேச்சுவார்த்தை 
news
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கை – இந்திய அதிகாரிகளுக்கு இடையில் புதுடில்லியில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தை இன்று இரண்டாவது நாளாகவும் தொடரவுள்ளது.
 
மன்னார் வளைகுடா பகுதியில் இருநாட்டு மீனவர்களும் சட்ட ரீதியில் மீன்பிடிப்பது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படுவதாக இதன்போது தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் நேற்றைய பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சின் தமிழ் ஊடக இணைப்பாளர் எஸ்.டி. சதாசிவம் குறிப்பிட்டார்.
 
மேலும் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மற்றும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பது தொடர்பாகவும் இந்த பேச்சுவார்த்தயில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.