கலாநிதி மாறன் செய்த தவறுக்கு நாங்கள் தண்டனை அனுபவித்தோம்!
அய்யப்பன், சக்சேனா பேட்டி!

அய்யப்பன், சக்சேனா பேட்டி!
அய்யப்பன் இன்று (17.12.2012) காலை சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து கலாநிதி மாறன், செம்பியன், ஆர்.எம்.ரமேஷ், கண்ணன் ஆகியோர் மீது புகார் அளித்தார். இவருடன் சன்டிவி சக்சேனாவும் உடனிருந்தார்.
பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாங்கள் சன்டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், சன் பிக்சர்ஸ் செம்பியன், ஆர்.எம்.ரமேஷ், கண்ணன் ஆகியோரை சந்தித்து உங்களுக்காகத்தான் நாங்கள் ஜெயிலுக்கு போனாம். நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் தண்டனை அனுபவித்தோம். எனவே விநியோகஸ்தர்களுக்கு தர வேண்டிய சுமார் 24 கோடி ரூபாயை நீங்கள்தான் தரவேண்டும் எனக் கேட்டோம்.
அதற்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனது உயிருக்கோ, குடும்பத்தினருக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு கலாநிதிமாறன், செம்பியம், ஆர்எம்ரமேஷ், கண்ணன் ஆகியோர்தான் பொறுப்பு என்றார் அய்யப்பன்.
அடுத்து பேசிய சக்சேனா, நாங்கள் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தோம். கலாநிதிமாறன் குரூப் செய்த குற்றத்திற்கு என் மீது பழி விழுந்தது. நான் ஜெயிலில் இருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த என் மனைவியை மிரட்டி நடக்காததையெல்லாம் நடந்ததாக எழுதி வாங்கிகொண்டார் ஆர்.எம்.ரமேஷ். அவர்கள் செய்த தவறுகளை நேருக்கு நேர் விவாதம் செய்ய நான் ரெடி. கலாநிதி மாறன் குரூப் ரெடியா?
இதையெல்லாம் கேட்டால் கூ-ப்படையை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். எங்கள் உயிர்போனாலும் பரவாயில்லை. எங்களுக்கு நியாயம் வேண்டும். அவர்கள் செய்த அனைத்து குற்றங்களையும் வெளிப்படுத்தாமல் விடமாட்டோம். கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளோம். தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம் என்றார்.
படம்: அசோக்
படம்: அசோக்