புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012


பி.பி.சி. செய்தியாளரின் ஆங்கில நூல் தமிழில் ஈழம் : சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்; சென்னையில் நேற்றுமுன்தினம் வெளியீடு
பி.பி.சியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதிய 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற நூல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நூலாசியர் பிரான்செஸ் ஹரிசன் வெளியிட்டுள்ளார்.
 
ஸ்ரீலங்காவில் போரின் இறுதிக் கட்டத்தில் உயிர் தப்பியவர்களின் கதைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டு அண்மையில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த நூல் அனைத்துலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
இந்த நிலையிலேயே இதனைத் தமிழிலும் வெளியிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. போரில் உயிர்தப்பிய முன்னாள் போராளி, ஒரு தாதி, ஒரு துறவி, மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட ஏனையவர்கள் அளித்த தகவல்களை அடிப்படையாக வைத்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
 
போரில் உயிர் தப்பியவர்களின் கதைகள் மட்டுமன்றி விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் கருத்துக்களும் இதில் இடம்பெற்றுள்ளதாக பிரான்செஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.
 
இந்த நூலை என்.கே.மகாலிங்கம் 'தமிழாக்கம் செய்துள்ளார். ஈழம் : சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்' என்னும் தலைப்பில் காலச்சுவடு வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது.
 
இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம்  மாலை 6 மணிக்கு சென் னையில் இடம்பெற்றது.

ad

ad